பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகியவை இந்த வார இறுதியில் தங்கள் பண்டிகை விற்பனையை நடத்துகின்றன.
பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகியவை இந்த வார இறுதியில் தங்கள் பண்டிகை விற்பனையை நடத்துகின்றன. மேலும், சியோமி, சாம்சங், ரியல்மி மற்றும் ஒன்ப்ளஸ் உள்ளிட்ட பல பிராண்டுகள் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவும், தற்போதுள்ள போர்ட்ஃபோலியோவில் தள்ளுபடியை வழங்கவும் தயாராக உள்ளன. பிளிப்கார்ட் விற்பனையின் ஒரு பகுதியாக செப்டம்பர் 30 முதல் லெனோவா மற்றும் மோட்டோரோலா போன்களுக்கு 25 சதவீதம் வரை தள்ளுபடி செய்கின்றன.
அக்டோபர் 4 வரை தொடரும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் நாட்கள் விற்பனையின் போது சலுகைகள் மற்றும் விலைக் குறைப்புகள் பட்டியலிடப்படும். மோட்டோ ஜி 7, லெனோவா கே 10 பிளஸ், மோட்டோரோலா ஒன் ஆக்ஷன், மோட்டோரோலா ஒன் விஷன் மற்றும் லெனோவா இசட் 6 ப்ரோ போன்ற தொலைபேசிகள் விற்பனைக்காக பட்டியலிடப்பட உள்ளன.
மோட்டோரோலா ஒன் ஆக்ஷன், பிளிப்கார்ட் விற்பனையின் போது 11,999 ரூபாயாக விற்கப்படும். அதன் வழக்கமான விலையான ரூ. 13,999 இருந்து, ரூ. 2,000 வரை ஆப்பரில் வழங்குகிறது. தொலைபேசியின் முக்கிய அம்சங்களாக மூன்று பின்புற கேமரா அமைப்பு, Exynos 9609 SoC மற்றும் 3,500mAh பேட்டரி ஆகியவை அடங்கும்.
மோட்டோரோலா ஒன் விஷன் விலை ரூ. 14,999. இது விற்பனையில் இருந்து, ரூ. 5,000 வரை தள்ளுபடியாக வழங்குகிறது. தொலைபேசியில் hole-punch டிஸ்ப்ளே, 48 மெகாபிக்சல் சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பு மற்றும் 3,500 mAh பேட்டரி உள்ளது.
இதேபோல், மோட்டோ ஜி 7-யின் தற்காலிக விலையாக ரூ. 7,500 யாக நிர்ணயித்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ.16,999 என்ற விலையில் அறிமுகமானது. இது Full-HD+ display, Snapdragon 632 SoC மற்றும் இரட்டை பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளது.
லெனோவா வரிசையில் வரும்போது, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Lenovo Z6 Pro-வின், விலை ரூ. 33.999 யிலிருந்து, ரூ. 2,000 விலை குறைத்து, தற்காலிகமாக பட்டியலாக ரூ. 31,999 அறிவித்துள்ளது. தொலைபேசியில் 48-megapixel camera, Snapdragon 855 processor, மற்றும் 4,000mAh பேட்டரி கொண்ட AI குவாட் கேமரா அமைப்பும் உள்ளது.
Lenovo A6 Note ஆனது, Lenovo Z6 Pro-வுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. தொலைபேசி, சில்லரை விற்பனையில் ரூ.1000 தள்ளுபடியுடன் 6,999 ரூபாய் என்று அறிவித்தனர். தொலைபேசியின் முக்கிய அம்சங்கள் 4,000 mAh பேட்டரி, dual rear cameras மற்றும் MediaTek Helio P22 SoC ஆகியவை அடங்கும்.
Lenovo K10 Note, இந்த மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இதை ரூ. 2,000 தள்ளுபடி செய்துள்ளனர். இந்த தொலைபேசி முதலில் ரூ. 13,999 அறிமுகப்படுத்தப்பத்த பின்னர், பிளிப்கார்ட் பிக் பில்லியன் நாட்கள் விற்பனையின் போது 11,999 ரூபாய் என்று அறிவித்தது. இந்த தொலைபேசியில் 6.3-inch waterdrop-notch display, triple camera setup, a 16-megapixel front camera, a Snapdragon 710 SoC, and a 4,050mAh பேட்டரி உள்ளது.
இறுதியாக, Lenovo K9 யின் சில்லரை விலையில் ரூ.500 வரை குறைத்து, ரூ.6499 விற்பனை செய்கின்றனர். இது 3,000 mAh பேட்டரி, Helio P22 SoC மற்றும் இரட்டை பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளது.
பிக் பில்லியன் நாட்கள் விற்பனையின் போது Lenovo K10 Plus இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு வர உள்ளது. இந்தியாவில், 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்ரோரேஜ் கொண்ட தொலைப்பேசியின் விலை ரூ. 10,999. இது கருப்பு மற்றும் ஸ்ப்ரைட் வண்ணங்களில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன், செப்டம்பர் 30 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு விற்பனை தொடங்கும். முக்கிய அம்சங்களில் 4,050 mAh பேட்டரி, Snapdragon 632 SoC, 6.22-inch waterdrop-notch display மற்றும் triple rear camera அமைப்பை கொண்டதாகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Scientists Unveil Screen That Produces Touchable 3D Images Using Light-Activated Pixels
SpaceX Expands Starlink Network With 29-Satellite Falcon 9 Launch
Nancy Grace Roman Space Telescope Fully Assembled, Launch Planned for 2026–2027
Hell’s Paradise Season 2 OTT Release Date: When and Where to Watch it Online?