சமீபத்திய அப்டேட்டின் பதிப்பு எண் QSA30.62-24-ஐக் கொண்டுள்ளது. பிரேசிலில் உள்ள Motorola One Vision பயனர்கள் தற்போது இந்த அப்டேட்டைப் பெறுகின்றனர்.
Motorola One Vision கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது
Motorola One Vision சமீபத்திய ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை பெறத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அப்டேட் இப்போது பிரேசிலில் வெளிவருகிறது. நிறுவனம் நவம்பர் முதல் Motorola One Vision-ல் அப்டேட்டை சோதனை செய்து வருகிறது. பல மாதங்கள் அதை சோதித்தபின், இறுதியாக ஒரு நிலையான அப்டேட் வெளிவருகிறது. Motorola One Vision போனின் இந்த சமீபத்திய ஆண்ட்ராய்டு 10 மென்பொருள் அப்டேட் ஜனவரி 2020 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பையும் கொண்டு வருகிறது.
Motorola One Vision ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டைப் பெறுவதாக பிரேசிலிலிருந்து ஒரு பயனர் லெனோவா மன்றங்களில் பதிவிட்டுள்ளார். சமீபத்திய அப்டேட்டின் பதிப்பு எண் QSA30.62-24-ஐக் கொண்டுள்ளது. மேலும், அதன் அளவு பிராந்தியத்திற்கு ஏற்ப மாறுபடும். ஒரு சில பயனர்களுக்கு மட்டுமே இப்போது அப்டேட் கிடைத்துள்ளதாகவும், இந்த அப்டேட் ஒவ்வொரு தொகுப்பாக வெளிவருவதாகவும் பயனர் கூறுகிறார். நிறுவனத்தின் முடிவில் இருந்து, இது குறித்து எந்த உறுதிப்படுத்தலும் இல்லை. ஆனால், போனில் அப்டேட்டின் வருகையைக் காட்டும் ஸ்கிரீன் ஷாட்டை, பயனர் இணைத்துள்ளார். குறிப்பிட்டுள்ளபடி, இப்போதே பிரேசிலில் இந்த வெளியீடு தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. வெளியீட்டை உறுதிப்படுத்த நாங்கள் Motorola-வை அணுகியுள்ளேம், மீண்டும் அறிவிப்பு வந்தவுடன் இந்த இடத்தை புதுப்பிப்போம்.
உங்களுக்கு இன்னும் அறிவிப்பு கிடைக்கவில்லை எனில், Settings-க்கு சென்று அதை மேனுவலாக சரிபார்க்கவும். இந்த அப்டேட் ஒவ்வொரு தொகுதிகளாக வெளிவருவதாகக் கூறப்படுவதால், அது உங்கள் போனுக்கு வருவதற்கு சிறிது நேரம் எடுக்கலாம். இந்த அப்டேட்டை, வலுவான வைஃபை இணைப்பின் கீழ், போன் சார்ஜில் இருக்கும் போது இன்ஸ்டால் செய்ய பரிந்துரைக்கிறோம்.
ஆண்ட்ராய்டு 10 அப்டேட், dark mode, smart reply அதே போன்று gesture navigation போன்ற நல்ல அம்சங்களைக் கொண்டுவருகிறது. நினைவுகூர, Motorola One Vision கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் ஒரே 4GB + 128GB வேரியண்டின் விலை ரூ. 19,999 ஆகும். இது, 48-megapixel primary shooter உடன் டூயல் ரியர் கேமரா அமைப்பையும், முன்புறத்தில் hole-punch டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது. இந்த போன் octa-core Samsung Exynos 9609 SoC-யால் இயக்கப்படுகிறது. மேலும், இது 25-megapixel selfie shooter-ஐயும் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Google Android Dev Summit Returns After Four Years: Android 18 Could Be in Focus
Lava Virat Curve 5G Set to Go on Sale in India Today: Price, Offers
OnePlus 16 Launch Date Confirmed for October 12 in China: 185Hz Gaming Mode Revealed