Photo Credit: Lazada
இன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போன் திங்களன்று இந்தோனேசியாவில் அறிமுகமானது. 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இன்பினிக்ஸ் ஹாட் 8 உடன் ஒப்பிடும் போது, பிராசசர் மற்றும் பின்புற கேமராக்கள் அடிப்படையில் பெரிய மேம்படுத்தல்களுடன் இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் வருகிறது. இன்பினிக்ஸ் ஹாட் 9 மேட் பிளாக், சியான், வயலட் மற்றும் லைட் ப்ளூ கலர் ஆப்ஷன்கள் மற்றும் ஒற்றை ஸ்டோரேஜ் வேரியண்டில் கிடைக்கிறது. இன்பினிக்ஸ் ஹாட் 9 தற்போது இந்தோனேசியாவில் கிடைப்பதால், நிறுவனம் எப்போது ஸ்மார்ட்போனை உலக அளவில் வெளியிடத் தொடங்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
Follow @InfinixID dan nyalakan notifikasi yang tertera pada postingan. Dan jadilah yang paling awal untuk tau kejutan apa yang dibawa INFINIX HOT 9 ini ????
— Infinix Indonesia (@InfinixIndo) March 22, 2020
Link pembelian https://t.co/mQtRSEX0CO#GAKMUNGKIN #INFINIXHOT9 pic.twitter.com/l1C3TCLgAm
Infinix Hot 9 ஸ்மார்ட்போன் இந்தோனேசியாவில் மார்ச் 27 முதல் முன்பதிவு செய்யக் கிடைக்கும். போனின் ஒற்றை 4 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை Rp 1,699,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,870). முன்பு குறிப்பிட்டபடி, இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 நான்கு கலர் ஆப்ஷன்களில் வருகிறது.
டூயல்-சிம் Infinix ஹாட் 9 ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. இது எச்டி + ரெசல்யூஷனை வழங்குகிறது. ஸ்மார்ட்போனின் பின்புற பேனல் ஒரு பாலிகார்பனேட் பொருளிலிருந்து தயாரிக்கப்பட்டது. மேலும், அதன் முன்னோடி Infinix Hot 8 உடன் ஒப்பிடும்போது, சமீபத்திய இன்பினிக்ஸ் ஹாட் 9 மேம்படுத்தப்பட்ட பிராசசருடன் வருகிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் 1.8GHz மீடியாடெக் ஹீலியோ A25 ஆக்டா கோர் SoC-யால் இயக்கப்படுகிறது, இது 4 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
முன் பேனலில் உள்ள ஹோல்-பஞ்சில் AI அம்சங்களுடன் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. பின்புற பேனலில், செங்குத்தாக அடுக்கப்பட்ட குவாட் கேமரா அமைப்பு உள்ளது, இதில் ஆட்டோ-ஃபோகஸ் கொண்ட AI லென்ஸும் அடங்கும். குவாட் கேமரா அமைப்பில் மேலும் 16 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் இரண்டு 2 மெகாபிக்சல் ஷூட்டர்கள் உள்ளன.
இந்த போன் ஆண்ட்ராய்டு 10-அடிப்படையிலான எக்ஸ்ஓஎஸ் 6.0-ல் இயங்குகிறது மற்றும் 10W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. பின்புற கேமரா அமைப்பிற்கு அடுத்ததாக கைரேகை ஸ்கேனரும் உள்ளது. கூடுதலாக, இன்ஃபினிக்ஸ் ஹாட் 9-ன் இண்டர்னல் ஸ்டோரேஜை, மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கம் செய்யலாம்.
ஃபேஸ் அன்லாக், ஏஆர் இமோஜி, ஏஆர் ஸ்டிக்கர்கள் மற்றும் டிடிஎஸ் ஆடியோ டெக்னாலஜி ஆகியவை இன்பினிக்ஸ் புதிதாக அறிமுகப்படுத்திய ஸ்மார்ட்போனின் பிற அம்சங்களாகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்