இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோவில் 48 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இன்ஃபினிக்ஸ் ஹாட் 9, 13 மெகாபிக்சல் கேமராவைக் கொண்டுள்ளது.
இன்பினிக்ஸ் ஹாட் 9-ல் 13 மெகாபிக்சல் பிரதான கேமரா உள்ளது
இன்பினிக்ஸ் ஹாட் 9 மற்றும் இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 புரோ ஆகியவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு போன்களின் பின்புற கேமராவிலும் சிறிய வித்தியாசம் உள்ளது. இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்டுள்ளது. மறுபுறம், இன்ஃபினிக்ஸ் ஹாட் 9, 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்டுள்ளது. இரண்டு போன்கலிலும் ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளேக்கள் உள்ளன.
Infinix Hot 9 Pro-வின் விலை ரூ.9,499. இந்த போன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜுடன் கிடைக்கும். மறுபுறம், Infinix Hot 9 விலை ரூ.8,499. இந்த போனும் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜில் கிடைக்கும். இந்த இரண்டு போன்களையும் Flipkart-ல் இருந்து காணலாம். இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ ஜூன் 5 ஆம் தேதி விற்பனைக்கு வரும். அதே போன்று, இன்பினிக்ஸ் ஹாட் 9 ஜூன் 8 ஆம் தேதி விற்பனைக்கு வரும்.
Infinix ஹாட் 9 மற்றும் இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ டூயல்-சிம் ஆதரவைக் கொண்டுள்ளன. இந்த இரண்டு போன்களிலும் 6.6 இன்ச் ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே உள்ளது. போனின் உள்ளே ஒரு ஆக்டா கோர் ஹீலியோ பி 22 சிப்செட், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.
இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோவில் 48 மெகாபிக்சல் கேமரா உள்ளது. மறுபுறம், இன்ஃபினிக்ஸ் ஹாட் 9, 13 மெகாபிக்சல் கேமராவைக் கொண்டுள்ளது. இந்த போனில் செல்ஃபி எடுக்க 8 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.
இணைப்பிற்காக, இந்த இரண்டு போன்களிலும் புளூடூத் வி 5, 3.5 மிமீ ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, யுஎஸ்பி ஓடிஜி, வோவிஃபை மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் உள்ளன. இரண்டு போன்களிலும் 5,000 எம்ஏஎச் பேட்டரிகள் உள்ளன.
Is Redmi Note 9 Pro Max the best affordable camera phone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Astronomers Use Webb Telescope to Study Exoplanet Surface Beyond Atmosphere
Samsung Galaxy A27 Seemingly Confirmed via Company's Website, Could Launch Soon