இன்பினிக்ஸ் ஹாட் 9 சீரிஸில் இன்பினிக்ஸ் ஹாட் 9 மற்றும் இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ போன்கள் அடங்கும்.
Photo Credit: Flipkart
பிளிப்கார்ட்டில் உள்ள இன்பினிக்ஸ் ஹாட் 9 சீரிஸ் டீஸரில் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோவின் படம் இருப்பதாக தெரிகிறது
இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 சீரிஸ் மே 29 அன்று இந்தியாவில் அறிமுகமாகும். இந்த தகவலை மின் சில்லறை விற்பனையாளர் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது. வரவிருக்கும் சீரிஸின் இந்திய அறிமுகம் மே 20 அன்று இன்ஃபினிக்ஸ் சமூக ஊடகங்களில் பேசப்பட்டது.
இப்போது பிளிப்கார்ட் இந்திய சந்தையில் இன்ஃபினிக்ஸ் ஹாட் 9-ஐ மே 29 அன்று கொண்டுவருவதாக அறிவித்துள்ளது. மின் சில்லறை விற்பனையாளர் வரவிருக்கும் போனின் எந்த விவரக்குறிப்புகளையும் அம்சங்களையும் வெளியிடவில்லை. ஆனால், இந்த டீஸரில் இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ போனின் ஒரு பார்வை நமக்கு கிடைத்துள்ளது.
பிளிப்கார்ட் முகப்புப்பக்கத்தில் வெளியிடப்பட்ட பேனரின் படி, Infinix Hot 9 சீரிஸ் மே 29 அன்று மதியம் 12 மணிக்கு அறிமுகப்படுத்தப்படும். இந்த சீரிஸில் இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 மற்றும் இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 புரோ ஆகிய இரண்டு மாடல்கள் இருக்கலாம். இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட அதே மாதிரியாக இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 இருக்கலாம். அதே நேரத்தில் இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ இந்த போனின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக இருக்கும்.
பிளிப்கார்ட் தனது இணையதளத்தில் டீஸர் பக்கத்தில் இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 ப்ரோவின் புகைப்படத்தைப் பகிர்ந்தது. டீஸர் படம் போனின் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பு மற்றும் கைரேகை சென்சார் ஆகியவற்றைக் காட்டுகிறது. கூடுதலாக, திரையின் மேல் இடது மூலையில் ஹோல்-பஞ்ச் கட்அவுட் கொடுக்கப்பட்டுள்ளது. டி.டி.எஸ் ஆடியோ பிராண்டிங் போனின் கீழ் பின்புறத்திலும் தோன்றும்.
பிளிப்கார்ட், போனின் பெயரைக் கொடுக்கவில்லை என்றாலும், கேமரா அமைப்பில் 48 மெகாபிக்சல்கள், அதன் முதன்மை சென்சாராக இருக்கும். இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இன்ஃபினிக்ஸ் ஹாட் 9-ஐப் பார்த்தால், அதன் பின்புறத்தில் 16 மெகாபிக்சல் முதன்மை ஷூட்டர் உள்ளது. பிளிப்கார்ட்டில் காட்டப்பட்டுள்ள போன் இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 ப்ரோவாக இருக்கும் என்பதை தெளிவாகக் காட்டுகிறது.
இன்ஃபினிக்ஸ் ஹாட் 9-ல் 6.6 இன்ச் ஐபிஎஸ் எச்டி + எல்சிடி டிஸ்ப்ளே, ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ 25 செயலி, 4 ஜிபி ரேம் மற்றும் 5,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. கேமராக்களைப் பொறுத்தவரை, போனின் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவும் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பும் உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,652
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
Ubisoft Games on Steam Will No Longer Require Ubisoft Connect PC Launcher