Honor 9X இந்தியாவில் முதன்முறையாக இன்று நள்ளிரவு விற்பனைக்கு வர உள்ளது. Honor 9X-ன் விலை, விற்பனை சலுகைகள் மற்றும் விவரக்குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.
Honor 9X-ன் 4GB + 128GB வேரியண்ட் ரூ. 13,999-யாக விலையிடப்பட்டுள்ளது. அதன் top-end 6GB + 128GB மாடல் ரூ. 16,999 விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இந்த போன் Midnight Black மற்றும் Sapphire Blue கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். இந்தியாவில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வருகிறது.
விற்பனை சலுகைகளில், விற்பனையின் முதல் நாளில் Honor 9X-ன் 4GB + 128GB வேரியண்டில் ரூ. 1,000 தள்ளுபடி அடங்கும். ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் கோட்டக் மஹிந்திரா டெபிட் அல்லது கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 10 சதவீத வங்கி தள்ளுபடி உள்ளது. இந்த சலுகை ஜனவரி 19 முதல் ஜனவரி 22, 2020 வரை செல்லுபடியாகும். கூடுதலாக, இந்த போனை வாங்குவோர் ரூ. 2,200 மதிப்புள்ள ஜியோ பலன்களையும் பெற உள்ளனர். மேலும் ரூ. 249 மற்றும் ரூ. 349 ப்ரீபெய்ட் ப்ளான்களும் உள்ளது. ஜனவரி 19 முதல் 3 மாத காலத்திற்கு செல்லுபடியை வழங்குகிறது ஜியோ.
Honor 9X, EMUI 9.1 உடன் Android 9 Pie-ல் இயங்குகிறது. இந்த போன் 91 percent screen-to-body ratio மற்றும் pixel density of 391ppi உடன் 6.59-inch full-HD+ (1080 x 2340 pixels) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது 6GB RAM உடன் இணைக்கப்பட்டு HiSilicon Kirin 710F SoC-யால் இயக்கப்படுகிறது. இதில் 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. இதனை microSD card வழியாக (512GB வரை) விரிவாக்கம் செய்யலாம். இந்த போன் 10W சார்ஜிங் ஆதரவுடன் 4,000mAh பொருத்தப்பட்டு வருகிறது.
Honor 9X-ன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பில், f/1.8 aperture உடன் 48-megapixel shooter அடங்கும். இதன் பிரதான கேரா 120-degree field of view உடன் 8-megapixel wide-angle snapper மற்றும் 2-megapixel depth சென்சார் ஆகியவை சேர்ந்துள்ளது. இதில், f/2.2 lens உடன் 16-megapixel முன் கேமராவானது pop-up module-ல் உள்ளே பேக் செய்யப்படுகிறது. பின்புறத்தில், அங்கிகாரத்திற்காக circular fingerprint சென்சார் உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்