HONOR நிறுவனம் தனது பிரீமியம் சீரிஸில் Porsche 911 Carrera-வால் ஈர்க்கப்பட்ட 'Magic 8 RSR' ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இது மிக உயரிய ஹார்டுவேர் மற்றும் டிசைனைக் கொண்டுள்ளது.
Photo Credit: Honor
ஹானர் மேஜிக் 8 RSR போர்ஷே டிசைன் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும்.
ஸ்மார்ட்போன் உலகத்துல ஒரு "மெகா" சம்பவம் நடந்திருக்கு! ஆப்பிள், சாம்சங்னு எல்லாரும் அவங்க அவங்க ஃபிளாக்ஷிப் போன்களை இறக்கிட்டு இருக்கப்போ, ஹானர் (HONOR) நிறுவனம் இப்போ ஒரு "பெர்ஃபார்மென்ஸ் அரக்கனை" களமிறக்கியிருக்காங்க. அதுதான் HONOR Magic 8 RSR Porsche Design. பாக்குறதுக்கு ஒரு போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார் மாதிரியே இருக்குற இந்த போன்ல இருக்குற ஃபீச்சர்ஸை கேட்டா நீங்களே தலைசுத்தி போயிருவீங்க. "இது போனா இல்ல கம்ப்யூட்டரா?"னு கேக்குற அளவுக்கு அப்படி என்ன ஸ்பெஷல்? வாங்க பார்ப்போம். இந்த போனோட பேரே 'போர்ஷே டிசைன்' தான். போர்ஷே 911 கார்ல இருக்குற அந்த ஏரோடைனமிக் லுக் மற்றும் மேட்ரிக்ஸ் ஹெட்லைட் ஸ்டைலை இதோட கேமரா மாட்யூல்ல கொண்டு வந்துருக்காங்க. போனோட பின்னாடி இருக்குற அந்த 'நானோ-செராமிக்' பாடி போனுக்கு ஒரு ராயல் லுக் கொடுக்குது. இதுல IP69 ரேட்டிங் இருக்குறதால, தண்ணிக்குள்ள விழுந்தாலும் சரி, புழுதி பறந்தாலும் சரி போனுக்கு ஒன்னும் ஆகாது.
6.71-இன்ச் 1.5K குவாட்-கர்வ்டு LTPO OLED டிஸ்ப்ளே இதுல இருக்கு. 120Hz ரிஃப்ரெஷ் ரேட் மட்டுமில்லாம, இதோட பீக் பிரைட்னஸ் 6000 nits! அதாவது சுட்டெரிக்கிற வெயில்ல கூட டிஸ்ப்ளே அவ்வளவு பளிச்சுன்னு தெரியும். பாதுகாப்பிற்கு 'Rhino Glass' பயன்படுத்தப்பட்டிருக்கு. இந்த போன்ல இருக்குறது உலகிலேயே மிக வேகமான Snapdragon 8 Elite Gen 5 சிப்செட். இதுமட்டும் இல்லாம, இதுல அதிகபட்சமா 24GB RAM மற்றும் 1TB ஸ்டோரேஜ் இருக்கு. இவ்வளவு பவர் இருக்குறதால கேமிங், வீடியோ எடிட்டிங்னு எது பண்ணாலும் போன் சும்மா ராக்கெட் மாதிரி பறக்கும். ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான MagicOS 10 இதுல ரன் ஆகுது.
போட்டோகிராபி பிரியர்களுக்கு இது ஒரு பெரிய ட்ரீட்.
● 50MP மெயின் கேமரா: மிரட்டலான லோ-லைட் போட்டோகிராபி.
● 200MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ: இதுல 100x டிஜிட்டல் ஜூம் வசதி இருக்கு. நிலாவையே பக்கத்துல இருக்குற மாதிரி எடுக்கலாம்!
● 50MP அல்ட்ரா வைட்: 122 டிகிரி அகலமான போட்டோஸ். முக்கியமா இதுல ஒரு 'External Lens Kit' மாட்டிக்கிற வசதியும் இருக்கு, இதனால உங்க போன் ஒரு ப்ரொபஷனல் DSLR கேமராவாவே மாறிடும்.
இவ்வளவு பவர் இருக்குற போனுக்கு பேட்டரியும் பெருசா இருக்கணும்ல? அதான் ஹானர் இப்போ 7200mAh மெகா பேட்டரியை குடுத்துருக்காங்க. இது கூடவே 120W வயர்டு மற்றும் 80W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருக்கு. ஒரு தடவை சார்ஜ் போட்டா ரெண்டு நாளைக்கு சார்ஜ் பத்தி கவலையே பட வேண்டாம். சீனாவில் இதன் ஆரம்ப விலை (16GB+512GB) சுமார் ரூ. 1,04,000 முதல் தொடங்குகிறது. இதன் 24GB RAM + 1TB டாப் எண்ட் மாடல் சுமார் ரூ. 1,17,000 விலையில் விற்பனைக்கு வருகிறது. ஹானர் மற்றும் போர்ஷே கூட்டணியில வர்ற கடைசி போன் இதுதான்னு சொல்லப்படுது. அதனாலயே இந்த போன்ல எல்லாத்தையுமே பெஸ்ட்டா குடுத்துருக்காங்க. இந்த "அரக்கன்" போனை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? சாம்சங் S25 Ultra-வை இது ஓவர்டேக் பண்ணுமா? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்