HONOR நிறுவனம் தனது புதிய 'Magic8 Pro Air' ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இது மிக மெல்லிய டிசைனில் பிளாக்ஷிப் கேமரா மற்றும் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது
Photo Credit: Honor
ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஏர் நான்கு வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.
ஸ்மார்ட்போன் உலகத்துல ஒரு புது "ஸ்லிம்" புரட்சி வெடிச்சிருக்கு! "போன் லேசா இருந்தா பேட்டரி கம்மியா இருக்கும், இல்லனா கேமரா மொக்கையா இருக்கும்" அப்படின்ற விதியை உடைச்சு எறிஞ்சிருக்காங்க நம்ம ஹானர் (HONOR) நிறுவனம். வர்ற பிப்ரவரி மாசம் ஆப்பிளோட ஐபோன் ஏர் வரும்னு எதிர்பார்க்கப்படுற நிலையில, அதுக்கு முன்னாடியே அவங்களுக்குப் போட்டியா HONOR Magic8 Pro Air-ஐ இப்போ லான்ச் பண்ணிட்டாங்க. இது போனா இல்ல கத்தியான்னு கேக்குற அளவுக்கு அப்படி ஒரு ஷார்ப் டிசைன்! வாங்க, இதோட முழு ஜாதகத்தையும் பார்ப்போம். இந்த போனோட பேரே "ஏர்" (Air), அதுக்கு ஏத்த மாதிரியே இதோட தடிமன் வெறும் 6.1mm தான். நீங்க ஒரு பென்சில் வச்சிருந்தா கூட அதை விட இது மெலிசா இருக்கலாம்! இதோட எடை வெறும் 155 கிராம். கையில பிடிச்சாலே அவ்வளவு கம்பர்ட்டபிளா, ஒரு பிரீமியம் மெட்டாலிக் சாட்டின் பினிஷ்ல (Metallic Satin Finish) இருக்கு. இதுல ஏரோஸ்பேஸ் கிரேடு அலுமினியம் பயன்படுத்தப்பட்டிருக்கு, அதனால போன் லேசா இருந்தாலும் செம ஸ்ட்ராங்.
6.31-இன்ச் 1.5K LTPO OLED டிஸ்ப்ளே இதுல இருக்கு. 120Hz ரிஃப்ரெஷ் ரேட் இருக்குறதால ஸ்க்ரோலிங் பண்றப்போ செம ஸ்மூத்தா இருக்கும். முக்கியமான விஷயம், இதோட பிரைட்னஸ் 6000 nits! வெயில்ல நின்னு போன் பார்த்தா கூட டிஸ்ப்ளே கண்ணை பறிக்கும். இதுல 3D அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் இருக்குறதால, ஒரு செகண்ட்ல போனை அன்லாக் பண்ணிடலாம். மெலிசான போன்ல கேமரா சுமாராதான் இருக்கும்னு நினைச்சீங்கனா அது தப்பு. இதுல மூணு
● 50MP மெயின் கேமரா: OIS வசதியுடன் மிரட்டலான போட்டோஸ் எடுக்கும்.
● 64MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ: 100x டிஜிட்டல் ஜூம் வரைக்கும் பண்ண முடியும்.
● 50MP அல்ட்ரா வைட்: குரூப் போட்டோஸ் எடுக்க செமையா இருக்கும். முன்னாடி செல்பிக்காக ஒரு 50MP கேமரா கொடுத்திருக்காங்க. வீடியோ எடுக்கறவங்களுக்கு இதுல 4K 60fps சப்போர்ட் இருக்குன்றது ஒரு சூப்பர் நியூஸ்.
இதுல மீடியாடெக்-ஓட லேட்டஸ்ட் Dimensity 9500 சிப்செட் இருக்கு. கேமிங் முதல் எடிட்டிங் வரை எதுவுமே லேக் ஆகாது. மெலிசான போன்ல இவ்வளவு பெரிய 5,500mAh பேட்டரியை எப்படி வச்சாங்கன்னு தான் ஆச்சரியமா இருக்கு. இதுல 80W வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதி இருக்கு. ஒரு அரை மணிநேரம் சார்ஜ் போட்டாலே நாள் முழுக்க தாராளமா வரும்.
சீனாவில் இதன் ஆரம்ப விலை 12GB+256GB வேரியண்டிற்கு சுமார் ரூ. 65,200 முதல் தொடங்குகிறது. இது ஜனவரி 23 முதல் சீனாவில் விற்பனைக்கு வருகிறது. விரைவில் இந்தியா மற்றும் உலக சந்தைகளுக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.நீங்க ஒரு பக்கா ஸ்டைலிஷ் போன் வேணும், ஆனா பெர்ஃபார்மென்ஸ்ல எந்த ஒரு காம்ப்ரமைஸும் இருக்கக்கூடாதுன்னு நினைச்சா, கண்டிப்பா இந்த HONOR Magic8 Pro Air உங்களுக்கான போன் தான். இந்த ஸ்லிம் போனை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? ஐபோன் ஏர்-க்கு இது சரியான போட்டியா இருக்குமா? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்