ஸ்மார்ட்போன் சந்தையையே அதிரவைக்கும் வகையில், ஹானர் நிறுவனம் தனது புதிய 'Power 2' மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதில் உள்ள 10,080mAh பேட்டரி மற்றும் நீடித்த உழைப்பிற்கான சிறப்பம்சங்கள் டெக் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
Photo Credit: Honor
சீனாவில் அறிமுகமான HONOR Power 2, 10080mAh பேட்டரி, IP69K, Dimensity 8500 Elite விவரங்கள்
இன்னைக்கு நம்ம பார்க்கப்போறது ஒரு சாதாரண போன் பத்தி இல்ல, ஒரு "பேட்டரி பேய்" பத்திதான்! ஆமாங்க, ஹானர் (HONOR) நிறுவனம் அவங்களோட புதிய மாடலான HONOR Power 2-வை இப்போ அதிகாரப்பூர்வமா அறிமுகம் பண்ணிட்டாங்க. இந்த போனோட ஸ்பெசிபிகேஷன்ஸ பார்த்தா கண்டிப்பா நீங்க மிரண்டு போயிருவீங்க. முதல்ல இந்த போனோட ஸ்க்ரீன் பத்தி பார்த்தோம்னா, 6.79 இன்ச் அளவுள்ள 1.5K AMOLED டிஸ்ப்ளே குடுத்திருக்காங்க. இதுல 120Hz ரிஃப்ரெஷ் ரேட் இருக்குறதால, நீங்க கேம் விளையாடும்போதோ இல்ல வீடியோ பார்க்கும்போதோ ரொம்பவே ஸ்மூத்தா இருக்கும். அப்புறம் வெயில்ல கூட தெளிவா தெரியுற அளவுக்கு நல்ல பிரைட்னஸ் குடுத்திருக்காங்க.
இந்த போன்ல மீடியாடெக் நிறுவனத்தோட புத்தம் புதிய Dimensity 8500 Elite சிப்செட் பயன்படுத்தப்பட்டிருக்கு. இது ஒரு பவர்ஃபுல் சிப்செட் அப்படிங்குறதால, நீங்க ஹெவி கேமிங் பண்ணாலும் சரி, மல்டி டாஸ்கிங் பண்ணாலும் சரி போன் கொஞ்சம் கூட ஹேங் ஆகாது. இதுல 12GB மற்றும் 16GB ரேம் ஆப்ஷன்களும் இருக்கு.
இப்போ மெயின் மேட்டருக்கு வருவோம். நம்ம எல்லாருக்கும் இருக்குற பெரிய கவலையே போன் சார்ஜ் சீக்கிரம் தீந்து போறதுதான். ஆனா இந்த q-ல இருக்குறது சாதாரண 5000mAh பேட்டரி இல்லங்க, அசுரத்தனமான 10,080mAh பேட்டரி! யோசிச்சு பாருங்க, ஒரு ஆவரேஜ் யூசருக்கு இது கண்டிப்பா 3 லிருந்து 4 நாள் தாராளமா வரும். அதுமட்டும் இல்லாம, இவ்வளவு பெரிய பேட்டரியை சார்ஜ் பண்ண 66W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் குடுத்திருக்காங்க.
நிறைய போன்ல IP68 தான் பார்த்திருப்போம். ஆனா இதுல IP69K ரேட்டிங் இருக்கு. அதாவது சுடுதண்ணி பட்டாலோ இல்ல ரொம்பவே ஹை-பிரஷர் தண்ணி அடிச்சாலோ இந்த போனுக்கு எதுவும் ஆகாது. அந்த அளவுக்கு ஸ்ட்ராங்கா டிசைன் பண்ணிருக்காங்க. போட்டோகிராபிக்கு இதுல 50MP மெயின் கேமரா இருக்கு. இது பகல் நேரங்கள்ல நல்ல தரமான போட்டோக்களை கொடுக்கும். செல்ஃபி எடுக்க 8MP கேமரா குடுத்திருக்காங்க.
விலையை பொறுத்தவரைக்கும், சீனாவில் இது சுமார் 23,500 ரூபாய் (இந்திய மதிப்பில்) என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் ஆகியிருக்கு. இவ்வளவு பெரிய பேட்டரி மற்றும் சூப்பரான டிஸ்ப்ளேவுக்கு இந்த விலை ரொம்பவே வர்த் அப்படின்னு தான் சொல்லணும். சீக்கிரமே இது இந்தியாவுக்கும் வரும்னு எதிர்பார்க்கலாம். உங்களுக்கு இந்த 10,000mAh பேட்டரி போன் பிடிச்சிருக்கா? கீழ கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
iQOO 15R Price in India, Chipset Details Teased Ahead of Launch in India on February 24