உலகின் மிக முக்கியமான இரண்டு பெரும் டெக் நிறுவனங்களான ஆப்பிள் மட்டும் குவால்கம் இடையேயான சட்ட மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஓராண்டுக்கு மேலாக இந்த சட்ட மோதல் நடந்து வருகிறது. சீனா, ஜெர்மன் மற்றும் அமெரிக்க சந்தைகளில் கூடிய விரைவில் நடக்க இருக்கும் இந்த வழக்குகளின் முடிவில் தான் ஆப்பிள் நிறுவனம் தப்பிக்குமா என்று தெரிய வரும்.
ஆப்பிள் நிறுவனம் தங்களிடம் கொள்முதல் செய்த சிப்களுக்கு முறையான கட்டணத்தை செலுத்தவில்லை என்பது குவால்கம்மின் குற்றச்சாட்டு. ஆனால் ஆப்பிள் நிறுவனம், குவால்கம் தங்களது காப்புரிமையை பயன்படுத்தி ஒரு ஃபோனுக்கான சிப்புக்கு அதிக விலை வசூலிப்பதாகவும் குற்றம் சாட்டுகிறது.
ஒருவேலை தீர்ப்பு குவால்கம் நிறுவனத்துக்கு சாதகமாக வரும் பட்சத்தில், ஆப்பிள் நிறுவனம் 2700 கோடி ரூபாய் வரை அபராதம் வழங்க வேண்டியிருக்கும்.
இதுவரை 6 நாடுகளில் 50 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக புளூம்பெர்க்கைச் சேர்ந்த மேர் லார்சன் கூறுகிறார். அடுத்த வாரம் சர்வதேச வர்த்தக ஆணையம் குவால்கம் தரப்பு வாதத்தை கேட்கிறது. மேலும் குவால்கம் சிப்கள் இல்லாத, ஐபோன் 7 போன்களின் இறக்க்குமதியை தடை செய்யவும் ஆணையத்தின் முன் அந்நிறுவனம் கோரிக்கை வைக்கிறது.
இதே வாதத்தை ஜெர்மனி நீதிமன்றத்திலும் குவால்கம் முன் வைத்துள்ளது. ஜெர்மனி சந்தைக்குள் ஆப்பிள் விற்பனைக்கு தடை போட வேண்டும் என்றும் கூறியுள்ளது. நீதிபதி அந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட போதும், தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளார்.
சீன அரசின் காப்புரிமை ஆய்வு ஆணையம் இந்த மாதம் இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க உள்ளது. குவால்கம்மின் காப்புரிமை வாதத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது என ஆப்பிள் முறையிட்டுள்ளது.
குவால்கம் தன் நிலையில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளது. “சட்டப்படி எங்கள் தரப்பு நியாயத்தை வெல்வோம் “என்றும் கூறியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் தாங்கள் எந்த விதிமீறல்களிலும் ஈடுபடவில்லை என்றும், இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றாச்சாட்டுகள் அவசியமில்லாதது என்கிறது.
எதுவாக இருந்தாலும், இந்த வழக்கு செட்டில்மென்ட் மூலம் மட்டுமே முடிவுக்கு வரும் என்பது, சர்வதேச தொழில் வல்லுநர்களின் கருத்து. அதற்கான நேரம் மிக விரைவில் வரும் என்பதை எதிர்பார்க்கலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்