வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸில் வைக்கப்படும் வீடியோ, போட்டோவை எப்படி சேமிப்பது..?

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸில் வைக்கப்படும் வீடியோ, போட்டோவை எப்படி சேமிப்பது..?

வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸை வைப்பது மற்றும் பார்ப்பது என்பது மிகவும் சுலபமான விஷயம்தான். ஆனால், இந்த ஸ்டேட்டஸை சேமிப்பது எப்படி என்று யோசித்துள்ளீர்களா..?

ஹைலைட்ஸ்
 • யாருடைய வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸையும் சேமிக்க முடியும்
 • ஃபைல் மேனேஜர் ஆப் உங்கள் போனில் இருப்பது அவசியம்
 • இன்னொருவரின் ஸ்டேட்டஸை அனுமதி இல்லாமல் சேமிக்காதீர்கள்

வாட்ஸ்-அப் செயலியில் போட்டோ அல்லது வீடியோவை ஸ்டேட்டஸாக வைப்பது தற்கால யூத்தின் ட்ரெண்டாக உள்ளது. 2 ஆண்டுகள் முன்பு வரை வாட்ஸ்-அப் செயலி என்பது, ஒருவருடன் பேசிக் கொள்ள பயன்படும் ஆப் ஆகவே இருந்தது. ஆனால், ஸ்டேட்டஸ் வைப்பது போன்ற ஆப்ஷன்களால் ட்ரெண்டை கச்சிதமாக தனக்கேற்றார் போல் மாற்றிக் கொண்டது வாட்ஸ்-அப். இந்த ஸ்டேட்டஸ் என்கிற விஷயம் ஸ்னாப்-சாட், இன்ஸ்டாகிராமில் இருப்பது போன்றதுதான். வைக்கப்படும் 24 மணி நேரத்தில் அது தானாக மறைந்துவிடும். 

வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸை வைப்பது மற்றும் பார்ப்பது என்பது மிகவும் சுலபமான விஷயம்தான். ஆனால், இந்த ஸ்டேட்டஸை சேமிப்பது எப்படி என்று யோசித்துள்ளீர்களா..? உங்களிடம் ஆண்ட்ராய்டு போன் இருந்தால், கீழே குறிப்பிட்டிருக்கும் வழிமுறைகளை பின்பற்றி வாட்ஸ்-அப் ஸடேட்டஸை சேமிக்க முடியும். 

பல நேரங்களில் மிகவும் நகைப்புக்குரிய வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸை நாம் பார்ப்பதுண்டு. இனி அதை சேமிக்கவும் முடியும். ஆனால், இன்னொருவரின் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸை சேமிப்பதற்கு முன்னர் அந்த நபரின் ஒப்புதலைப் பெற்றுவிடுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். 

வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் வீடியோவை சேமிப்பது எப்படி?

உங்களது ஆண்ட்ராய்டு போனில் ஃபைல் மேனேஜர் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். பல ஃபைல் மேனேஜர்கள் மூலம் இதை செய்யலாம் என்றாலும், நாங்கள் கூகுள் ஃபைல்ஸ் செயலியை பயன்படுத்தினோம். கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களில், இது வாங்கும் போதே இருக்கும். மற்றவர்கள் கூகுள் ப்ளே மூலம் இதை டவுன்லோடு செய்து கொள்ளலாம். 

கீழே இருக்கும் இந்த ஸ்டெப்ஸை பின்பற்றி வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸை சேமிக்கவும்:

1.உங்களது ஆண்ட்ராய்டு போனில், கூகுள் ஃபைல்ஸ் செயலியை ஓப்பன் செய்யவும். ஹாம்பர்கர் ஐகானை க்ளிக் செய்யவும். பின்னர் செட்டிங்ஸுக்குள் நுழையவும்

2.நீங்கள் பிக்சல் ஸ்மார்ட்போனை பயன்படுத்தினால், ஃபைல்ஸ் செயலியை திறக்கவும். 3 புள்ளிகள் வைத்திருக்கும் ஐகானை க்ளிக் செய்யவும். செட்டிங்ஸுக்குள் நுழையவும்.

3.அடுத்து வரும் ஸ்க்ரீனில் ‘ஷோ ஹிட்டன் ஃபைல்ஸ்' என்பதை க்ளிக்கவும். பிக்சல் போன்களில், ‘ஷோ இன்டர்னல் ஸ்டோரேஜ்'-ஐ க்ளிக்கவும். 

4.இப்போது ஃபைல்ஸ் செயலியின் மெயின் மெனுவுக்குப் போகவும். இன்டர்னல் ஸ்டோரேஜை-ஐ க்ளிக்கவும். 

5.இப்போது வாட்ஸ்-அப் ஃபோல்டர் > மீடியா > ‘.Statuses' என்பதை செய்யவும்.

6.இப்போது ஒரு போட்டோ அல்லது வீடியோவை சேமிக்க, அதை லாங்-ப்ரெஸ் செய்து காப்பி என்பதை க்ளிக்கவும். அந்த ஃபைலை எந்த ஃபோல்டரில் வேண்டுமானாலும் சேமித்துக் கொள்ளுங்கள்.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
 1. Lenovo Yoga Slim 7i லேப்டாப் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்ன?
 2. புதிதாக அறிமுகமாகவுள்ள Nokia 2.4 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் கசிந்தது!
 3. BSNL: 399 ரூபாய்க்கு புதிய பிளான் அறிமுகம்! ஏற்கனவே உள்ள இரு பிளான்கள் இன்று முதல் ரத்து!!
 4. டிக்டாக்கில் முதலீடு செய்ய ரிலையன்ஸ் உடன் பேச்சுவார்த்தை!
 5. விதிகளை மீறி பயனர்களின் தகவல்களைத் திரட்டிய டிக்டாக்?
 6. Realme 6i ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனை! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!
 7. Realme C12, Realme C15 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்! என்ன எதிர்பார்க்கலாம்?
 8. Redmi K30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!
 9. Redmi Note 9: அறிமுகமான முதல் மாதத்திலேயே MIUI 12 சாப்ட்வேர் அப்டேட்!
 10. Google People Cards அறிமுகம்: இனி உங்கள் பெயரைத் தேடினாலே கூகுளில் கிடைத்துவிடுவீர்கள்!
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com