இந்த கட்டுரையில், வாட்டர்மார்க் இல்லாமல் டிக்டோக் வீடியோக்களை எப்படி பதிவிறக்குவது என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.
மியூசிக், எஃபெக்ட்ஸ் மற்றும் பலவற்றோடு குறுகிய வீடியோக்களை பதிவிட டிக்டோக் உங்களை அனுமதிக்கிறது
டிக்டோக் வீடியோக்களை, இனி வாட்டர்மார்க் இல்லாமல் பதிவிறக்கம் செய்யலாம். ஆம், வீடியோக்களை பதிவிறக்க நாங்கள் மூன்று வலைதளத்தை பரிந்துரைக்கிறோம்.
வெறும் 60 விநாடிகளின் உங்களின் புகழை ஊரரிய செய்யும் செயலிகளில் ஒன்று டிக்டோக். உங்கள் ஸ்மார்ட்போனில், வீடியோக்களை உருவாக்கி அவற்றை செயலியில் பதிவிட உங்களை அனுமதிக்கிறது. இந்த செயலியில் சில மேம்பட்ட எடிட்டிங் கருவிகளும் இதில் உள்ளன. திரைப்பட வசங்கள் பேசுவது போல் லிப் சிங் செய்வது, பாடலுக்கு நடனமாடுவது போன்ற அனைத்தையும் நீங்கள் உருவாக்க முடியும்.
இப்போது, டிக்டோக்-கே, அதன் வீடியோக்களைப் பதிவிறக்க அனுமதிக்கிறது. ஆனால், அந்த வீடியோவில் பெரிய வாட்டர்மார்க் இருக்கும்.
இவ்வாறு வீடியோக்களை பதிவிறக்கினால், அதில் வாட்டர்மார்க் இருக்கும்.
உங்கள் ஸ்மார்ட்போனின் பாதுகாப்பிற்கும் உங்கள் தனியுரிமைக்கும் ஏற்படும் ஆபத்து காரணமாக, மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் பரிந்துரைக்கிறோம்.
இதற்கு மாற்றாக, நீங்கள் in.downloadtiktokvideos.com அல்லது www.ttdownloader.com-ஐப் பயன்படுத்தியும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்யலாம்.
தனிப்பட்ட பயன்பாட்டிற்காக டிக்டோக்கிலிருந்து வீடியோவை பதிவிறக்கம் செய்வோர், தாங்களே பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். பதிவிறக்கிய வீடியோக்களை ஷேர் செய்தால், அசல் படைப்பாளரை குறிப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
மேலும் பயிற்சிகளுக்கு How To பகுதியைப் பார்வையிடவும்
Is iPhone SE the ultimate 'affordable' iPhone for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Oppo Pad 5 Will Launch in India Alongside Oppo Reno 15 Series; Flipkart Availability Confirmed