யூடியூப் வீடியோக்களை மொத்தமாக பதிவிறக்கம் செய்ய பல்வேறு ஆப்ஷன்கள் உள்ளன.
உலகம் முழுவதும் 2 பில்லியன் யூடியூப் பயனாளர்கள் உள்ளனர்.
பெரும்பாலானோர் யூடியூப்பில் தான் வீடியோக்களைப் பார்த்து வருகிறார்கள். திரைப்பட டிரெய்லர்கள், வீடியோ சாங்ஸ், காமெடி நிகழ்ச்சிகள், அறிவுசார்ந்த விஷயங்கள் போன்றவற்றை யூடியூப்பில் பார்க்கிறார்கள். சிலருக்கு ஒரு வீடியோ பிடித்திருக்கும், அதை டவுன்லோடு செய்ய நினைப்பார்கள், ஆனால் எப்படி டவுன்லோடு செய்ய வேண்டும் என்று தெரியாது. சிலருக்கு ஒரு வீடியோவை மட்டும் டவுன்லோடு செய்ய தெரிந்திருக்கும். ஆனால், ப்ளே லிஸ்ட்டில் உள்ள எல்லா வீடியோக்களையும் ஒரே முயற்சியில் டவுன்லோடு செய்யத் தெரிந்திருக்காது. அவ்வாறு யூடியூப் வீடியோக்களை மொத்தமாக பதிவிறக்கம் செய்ய பல்வேறு ஆப்ஷன்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்குக் காணலாம்.
கம்ப்யூட்டரில் யூடியூப் வீடியோக்களை மொத்தமாக பதிவிறக்கம் செய்யும் முறை:
1. முதலில் 4K Video Downloader என்பதை டவுன்லோடு செய்து ஓபன் செய்து கொள்ளவும்.
2. இப்போது நீங்கள் டவுன்லோடு செய்ய விரும்பும் யூடியூப் ப்ளே லிஸ்ட்டின் லிங்கை காப்பி செய்து கொள்ளவும். அதாவது: click Playlists > right-click any playlist and click Copy Link.
3. அந்த லிங்கை அப்படியே 4K Video Downloader இல் பேஸ்ட் செய்து, டவுன்லோடு ப்ளே லிஸ்ட் என்பதைக் க்ளிக் செய்யவும். அவ்வளவு தான். யூடியூப் வீடியோக்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
சாப்ட்வேர் இல்லாமல், ஆன்லைனியே வீடியோக்களை பதிவிறக்கம் செய்யும் முறை:
1. முதலில் YouTubePlaylist.cc என்ற இணையதளத்தை ஓபன் செய்து, ஒரு கணக்கை உருவாக்கிக் கொள்ளவும்.
2. இப்போது நீங்கள் டவுன்லோடு செய்ய விரும்பும் யூடியூப் ப்ளே லிஸ்ட்டின் லிங்கை காப்பி செய்து கொள்ளவும். அதாவது: click Playlists > right-click any playlist and click Copy Link.
3. அந்த லிங்கை அப்படியே YouTubePlaylist.cc இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் செர்ச் பாரில் பேஸ்ட் செய்ய வேண்டும். பின்பு, All Title Video என்பதை க்ளிக் செய்து யூடியூப் வீடியோக்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம்..
ஆண்ட்ராய்டு போனில் யூடியூப் வீடியோக்களை டவுன்லோடு செய்யும் எளியமுறை:
1. முதலில் Videoder என்ற ஆப்பை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.
2. இப்போது வீடியோடெர் ஆப்பை ஓபன் செய்து, அதிலேயே யூடியூப்பையும் ஓபன் செய்யவும்.
3. யூடியப் வந்ததும், நீங்கள் டவுன்லோடு செய்ய விரும்பும் யூடியூப் ப்ளே லிஸ்ட் அருகில் டவுன்லோடு ஆப்ஷன் இருக்கும். அதை க்ளிக் செய்து வீடியோவை டவுன்லோடு செய்யலாம்.
இதே போல் மொபைல் பிரவுசரில் மூலமாக யூடியூப் லிங்க் காப்பி செய்து, அதை வீடியோடரில் பேஸ்ட் செய்தும் டவுன்லோடு செய்யலாம்.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவை டவுன்லோடு செய்யும் முறை:
Is Nord the iPhone SE of the OnePlus world? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
The Offering Is Streaming Now: Know Where to Watch the Supernatural Horror Online
Lazarus Is Now Streaming on Prime Video: Know All About Harlan Coben's Horror Thriller Series