இனி வாட்ஸ்அப் செய்திகளை schedule செய்யலாம்! - எப்படினு தெரிஞ்சுகோங்க!!

இனி வாட்ஸ்அப் செய்திகளை schedule செய்யலாம்! - எப்படினு தெரிஞ்சுகோங்க!!

இனி வாட்ஸ்அப் செய்திகளை schedule செய்யலாம்

ஹைலைட்ஸ்
 • வாட்ஸ்அப்பில் செய்திகளை எப்படி schedule செய்வது என்பதை அறிக
 • நீங்கள் அதை Android மற்றும் iPhone இரண்டிலும் செய்யலாம்
 • செய்திகளை schedule செய்வது வாட்ஸ்அப்பின் அதிகாரப்பூர்வ அம்சம் அல்ல

வாட்ஸ்அப் இந்த ஆண்டு தொடக்க முதலே பல அப்டேட்டுகளை கொண்டுவரத் தொடங்கியது. அந்த வகையில் தற்போது புதிதாக schedule WhatsApp messages என்ற அம்சத்தைக் கொண்டுவரவுள்ளது. உங்கள் நண்பரின் பிறந்தநாளுக்கு நள்ளிரவில் வாழ்த்து கூறவேண்டும் என்றால், இனி முழித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. வாட்ஸ்அப்பின் இந்த அம்சத்தைப் பயன்படுத்து வாழ்த்து செய்தியை schedule செய்யலாம். இந்த அம்சம் Android மற்றும் ஐபோன் இரண்டிலும் விரைவில் வெளிவர உள்ளன. 

ஆண்ட்ராய்டில் வாட்ஸ்அப் செய்தியை எவ்வாறு schedule செய்வது?

இந்த அம்சத்தை மூன்றாம் தரப்பு செயலிகளில் ஒன்றான SKEDit உதவியுடன் வாட்ஸ்அப்பில் செய்திகளை schedule செய்யலாம். 


வழிமுறைகள்:

 1. Google Play Store-க்குச் சென்று> SKEDit-ஐ பதிவிறக்கி இன்ஸ்டால் செய்யவும்> செயலியைத் திறக்கவும்.
 2. பிறகு, sign up செய்ய வேண்டும்.
 3. அதைத் தொடர்ந்து மெயின் மெனுவில் வாட்ஸ்அப்பைத் டேப் செய்ய வேண்டும்.
 4. அடுத்த திரையில், நீங்கள் அனுமதிகளை வழங்க வேண்டும். Enable Accessibility> SKEDit> toggle on Use service > Allow என்பதைத் டேப் செய்யவேண்டும்.
 5. பிறகு விவரங்களை நிரப்ப வேண்டும். recipient-ஐ சேர்த்து, உங்கள் செய்தியை உள்ளிட்டு, அட்டவணை தேதி மற்றும் நேரத்தை அமைத்து, schedule செய்த செய்தியை மீண்டும் செய்ய விரும்புகிறீர்களா இல்லையா என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
 6. இறுதியாக Ask me before sending என்பதைக் காண்பீர்கள். இதை மாற்றவும்> டிக் ஐகானைத் டேப் செய்யவும்> உங்கள் செய்தி இப்போது schedule செய்யப்படும். பிறகு, Send என்பதைத் டேப் செய்யவும், உங்கள் schedule செய்தி நிகழ்நேரத்தில் அனுப்பப்படுவதைக் காண்பீர்கள்.


ஐபோனில் வாட்ஸ்அப் செய்தியை எப்படி schedule செய்வது?

வாட்ஸ்அப் செய்தியை schedule செய்ய iOS-ல் எந்த மூன்றாம் தரப்பு செயலி கிடைக்கவில்லை. இருப்பினும், இந்த செயல்முறையை Phone-ல் Siri Shortcuts மூலம் புதிய வழி உள்ளது. இது ஆப்பிள் செயலியாகும். இது உங்கள் வாட்ஸ்அப் செய்தியை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அனுப்ப ஆட்டோமேஷனை நம்பியிருக்கும். 

வழிமுறைகள்:

 1. App Store-க்குச் சென்று உங்கள் ஐபோனில் Shortcuts செயலியை பதிவிறக்கி திறக்கவும்.
 2. கீழே உள்ள ஆட்டோமேஷன் டேபை தேர்ந்தெடுக்கவும்.
 3. மேல்-வலது மூலையில் உள்ள + ஐகானைத் டேப் செய்து, Create Personal Automation-ஐ டேப் செய்யவும்.
 4. அடுத்த திரையில், உங்கள் ஆட்டோமேஷனை எப்போது இயக்க வேண்டும் என்பதை திட்டமிட நாள் நேரத்தைத் டேப் செய்யவும். Next-ஐ டேப் செய்யவும்.
 5. பிறகு, Add Action-ஐ டேப் செய்யவேண்டும், பின்னர் search bar-ல் type Text மற்றும் தோன்றும் செயல்களின் பட்டியலிலிருந்து, உரையைத் தேர்ந்தெடுக்கவும்.
 6. பிறகு, text field-ல் உங்கள் செய்தியை உள்ளிடவும். இந்த செய்தி நீங்கள் எப்படி வேண்டுமானாலும், திட்டமிடலாம். 
 7. செய்தியை உள்ளிட்டு முடித்ததும், text field-ற்கு கீழே உள்ள + ஐகானைத் டேப் செய்யவும், search bar-ல் வாட்ஸ்அப்பைத் தேடுங்கள்.
 8. தோன்றும் செயல்களின் பட்டியலிலிருந்து, Send Message via WhatsApp என்பதைத் தேர்ந்தெடுக்கவும். recipient-ஐத் தேர்ந்தெடுத்து Next என்பதை அழுத்தவும். இறுதியாக, அடுத்த திரையில், Done என்பதைத் டேப் செய்யவும்.
 9. இப்போது scheduled time-ல், Shortcuts செயலியில் இருந்து அறிவிப்பைப் பெறுவீர்கள். அது text field-ல் ஒட்டப்பட்ட உங்கள் செய்தியுடன் வாட்ஸ்அப்பைத் திறக்கும். பிறகு, Send-ஐ கிளிக் செய்ய வேண்டும்.

மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் ஒரு வாரம் வரை மட்டுமே வாட்ஸ்அப் செய்திகளை schedule செய்ய முடியும்.

மேலும் பயிற்சிகளுக்கு, how to பகுதியை பார்வையிடவும்.


Is Mi 10 an expensive OnePlus 8 or a budget budget S20 Ultra? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी
பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
 1. வாய்ஸ் கன்ட்ரோலுடன் சூப்பரான Mi ஸ்மார்ட் பல்பு அறிமுகம்!
 2. Realme Narzo 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!
 3. பட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ 20 சீரிஸ் நாளை அறிமுகம்!
 4. சாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்!
 5. OnePlus 8T அக்டோபர் 14 அறிமுகம்? முழு விவரங்கள்
 6. Moto E7 Plus ஸ்மார்ட்போன் செப்.23 அறிமுகம்!
 7. Google Play இலிருந்து Paytm செயலி நீக்கம்: விதிகளை மீறியதாக கூகுள் குற்றச்சாட்டு!
 8. வந்துவிட்டது Redmi 9A ஸ்மார்ட்போன்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!
 9. அடுத்த வாரம் Realme C17 ஸ்மார்ட்போன் அறிமுகம்! எவ்வளவு ரூபாய் இருக்கும்?
 10. அமேசான் பொருட்கள் தரம் குறைந்தவை, எளிதில் தீப்பிடிக்கின்றன.. ஆய்வில் தகவல்
© Copyright Red Pixels Ventures Limited 2021. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com