சியோமியின் குளோபல் தலைவர் மனு குமார் இந்த புதிய தயாரிப்புகளை பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
சியோமி நிறுவனம் இந்தியாவில் தனக்கென ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்கிக் கொண்டு வருகிறது. தற்போது சியோமி சார்பாக ஒரு புதிய ஸ்மார்ட் குக்கர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 'சியோமி மீஜியா இண்டக்ஷன் குக்கர்' மற்றும் 'சியோமி மீஜியா ஸ்மார்ட் ரைஸ் குக்கர்' என சீனாவில் சியோமி, சமையலுக்கான பொருட்களை ஏற்கெனவே விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், அந்த தயாரிப்புகள் இந்தியாவிலும் வெளியாக உள்ளன. வெளியாகும் கால அட்டவணை இன்னும் கசியாத நிலையில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன இந்த புதிய வரவுகள்.
சியோமி குளோபல் நிறுவனத்தின் தலைவர் மனு குமார் ஜெயின் ட்விட்டரில் இந்த புதிய தயாரிப்பை பற்றிய தகவலை வெளியிட்டார். வெளியிடப்பட்ட படத்தில் இரண்டு குக்கர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. இதனால் இந்த இரண்டு தயாரிப்புகளும் இந்தியாவில் வெளியாவதற்கு அதிகப்படியான வாய்ப்பு இருகின்றன.
Burgers, pizzas, pasta, biryani! ????
— Mi India (@XiaomiIndia) April 1, 2019
Why does tasty food always end up being unhealthy & calorie heavy? ????
Things are about to change. Can you guess what's coming? ????️ pic.twitter.com/oW6xstKdYl
மேலும் எம்ஐ இந்தியா சார்பில் வெளியான இந்த டீசரில், புதிய குக்கர் தொழில்நுட்பத்தை வைத்து பர்கர், பாஸ்தா மற்றும் பீட்சா போன்றவற்றை ஆரோக்கியமான முறையில் தயாரிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் வெளியாகியுள்ள இந்த மீஜியா ரைஸ் குக்கர், ரூ.6,100 மதிப்புக்கு அங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இண்டக்ஷ்ன் குக்கர் பிளேட், ரூ.2000க்கு விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்கப்படுகிறது. ஓலெட் திரையுடன் வரும் இந்த ஸ்மார்ட் தயாரிப்பு, குக்கரின் வெப்பநிலை மற்றும் குக்கரின் மற்ற செயல்பாடுகளை காட்டும்.
சியோமி மீஜியா இண்டக்ஷன் குக்கர் இரண்டு வகைகளாக வெளியாகிறது. ஒரு மாடல் ரூ.3,000க்கு மதிப்பிடப்படுகின்ற நிலையில் லைட் மாடல் ரூ2,000க்கு மதிப்பிடப்படுகிறது. ஏற்கெனவே குறிப்பிட்டது போல இந்த குக்கர்கள் வெளியாகும் தேதி மற்றும் கூடுதல் அமைப்புகள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
CES 2026: Asus ProArt PZ14 With Snapdragon X2 Elite SoC Launched Alongside Zenbook Duo and Zenbook A16
Lenovo Legion Go 2 SteamOS Version Revealed at CES 2026, Will Be Available From June 2026