Photo Credit: Redmi
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Redmi Smart Fire TV 4K 2024 பற்றி தான்.
Redmi Smart Fire TV 4K 2024 இந்தியாவில் இரண்டு டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. Redmi 55 இன்ச் ஃபயர் டிவியை சந்தையில் அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறை. 43-இன்ச் மாடலில் 24W ஸ்பீக்கர்கள் மற்றும் 55-இன்ச் மாடலில் 30W ஸ்பீக்கர் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கும். Redmi Smart Fire TV 4K தொடரில் inbuilt Alexa voice assistant வசதி வருகிறது.
Redmi Smart Fire TV 4K 2024 ஆரம்ப விலை ரூ. 43 இன்ச் மாடலுக்கு 23,499 எனவும், 55 இன்ச் மாடலின் விலை ரூ. 34,499 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அறிமுக சலுகையாக ரூ. 1,500 ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுடன் வாங்கும்போது கிடைக்கும். இந்த ஸ்மார்ட் டிவிகள் செப்டம்பர் 18 முதல் விற்பனைக்கு வரும். Redmi S அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது பிளிப்கார்ட்டில் வாங்கலாம்.
43 இன்ச், 55 இன்ச் என இரு அளவுகளில் வருகிறது. குறிப்பாக 4K display, 178-degree viewing angle உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த டிவிகள் வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவிகள் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும். மோஷன் எஸ்டிமேஷன், எம்இஎம்சி தொழில்நுட்பமும் உள்ளது. இது படம்-இன்-பிக்ச்சர் வசதியை வழங்குகிறது.
ஸ்மார்ட் டிவிகள் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடங்கிய மெமரியை கொண்டுள்ளது. 64-பிட் குவாட்-கோர் சிப் மூலம் இயங்குகிறது. ஆப் ஸ்டோர் வழியாக 12,000 க்கும் மேற்பட்ட ஆப்களை அணுகலாம். பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஜியோசினிமா மற்றும் பல போன்ற ஓவர்-தி-டாப் (OTT) தளங்களை இதில் பார்க்கலாம்.
இணைப்புக்காக, Redmi Smart Fire TV 4K ஆனது Bluetooth 5.0, dual-band WiFi, AirPlay 2, மற்றும் Miracast ஆகியவற்றை வழங்குகிறது. வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்யவும், புகைப்படங்களைப் பகிரவும், வெளிப்புற ஸ்பீக்கர்கள் அல்லது ஹெட்ஃபோன்களுடன் இணைக்கவும் வசதிகள் உள்ளது.
Integrated Alexa voice assistant மூலம் பயனர்கள் டிவியைக் கட்டுப்படுத்தலாம். வேண்டியதை வாய்மொழியாகத் தேடலாம். அலெக்சா வீடியோ பரிந்துரைகளுக்கும் உதவ முடியும். மேலும், ஸ்மார்ட் டிவி மற்ற அலெக்சா-இணக்கமான ஸ்மார்ட் உபகரணங்களுக்கான மைய மையமாக செயல்பட முடியும்.அவை அனைத்தையும் குரல் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்றும் நிறுவனம் கூறுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்