ப்ளே ஸ்டேஷன் கேம்ஸ் (PS4) இப்போது சோனி இந்தியாவின் பேக் டூ ஸ்கூல் (Back to School) சலுகையில் 999 ரூபாய்க்கு கிடைக்கிறது
ப்ளே ஸ்டேஷன் கேம்ஸ் (PS4) இப்போது சோனி இந்தியாவின் பேக் டூ ஸ்கூல் (Back to School) சலுகையில் 999 ரூபாய்க்கு கிடைக்கிறது. அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற தளங்களில் உள்ள விலையான 1,499 ரூபாயை விட குறைந்த விலைக்குக் கிடைக்கும் என்ற செய்தியைப் பல சில்லரை வணிகர்களும் என்டிடிவியிடம் உறுதி செய்துள்ளனர். எனினும் சில விசயங்களை கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. முதலில் இரண்டு கேம்களை 1,999 ரூபாய்க்கு வாங்க வேண்டும். இரண்டாவது சோனி இந்தியாவின் பேக் டூ ஸ்கூல் சலுகை ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 30 வரை மட்டுமே. இறுதியாக, எல்லா PS4 கேம்களுக்கும் இச்சலுகை பொருந்தாது; ப்ளேஸ்டேஷன் ஹிட்ஸ் லேபிளில் உள்ள எல்லா கேம்களுக்குமானதும் அல்ல. ஆகவே, நீங்கள் கிராவிட்டி ரஷ் ரீமாஸ்டர்ட், கிராவிட்டி ரஷ் 2 போன்ற கேம்களை தலா 999ரூபாய்க்குப் பெறலாம் என்று நினைத்தால் அது நடக்காது. இச்சலுகையில் கிடைக்கும் கேம்களின் பட்டியல் கீழ்வருமாறு:
999 ரூபாய்க்கு இந்தியாவில் கிடைக்கும் PS4 கேம்கள்
இதில் பல கேம்கள் அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற தளங்களில் கிடைக்கும் சிறப்பு சலுகையால் மலிவாக கிடைத்து வந்தால், ஒட்டுமொத்தமாக பலரும் கேம்களின் விலையை உயர்த்தும் போக்கில் உள்ள நிலையில் இது வரவேற்கத்தக்க சலுகைதான்.![]()
மேலும் இதில் எத்தனை கேம்கள் உடனடியாகக் கிடைக்கும் என்றும் பார்க்கவேண்டியுள்ளது. சோதித்துப் பார்த்ததில் பல கேம்களும் அமேசானில் 990 ரூபாய்க்கே உடனடியாக வாங்கக் கிடைக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Take-Two CEO Says AI Won't Be 'Very Good' at Making a Game Like Grand Theft Auto
iQOO Neo 11 With 7,500mAh Battery, Snapdragon 8 Elite Chip Launched: Price, Specifications