பப்ஜி லைட் வெர்ஷன் அப்டேட்டில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பப்ஜி லைட் வெர்ஷன் அப்டேட் 564 MB ஆகும்
பப்ஜி லைட் 0.18.0 அப்டேட் வந்துள்ளது. முதலாமாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அப்டேட் கொண்டு வரப்பட்டுள்ளது. பீட்டா வெர்ஷனில் உள்ள சிறப்பம்சங்கள் அனைத்தும் லைட் வெர்ஷனில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக லக்கி டிரா தீம் கலக்கலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வடமேற்கு பகுதியில் உள்ள வரேங்க மேப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
புதிய வெப்பன்கள், புதிய அரேனா மேப், சிஸ்டம் அப்டேட்ஸ், டிஸ்பிளே மாற்றம் போன்ற பல அம்சங்கள் 0.18.0 வெர்ஷனில் அப்பேட் செய்யப்பட்டுள்ளது.
கேமர்கள் கூகுள் ப்ளே ஸ்டோர் மூலமாக பப்ஜி மொபைல் லைட்டை அப்டேட் செய்து, இலவசமாக விளையாடலாம். இருப்பினும் சில பயனர்களுக்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் அப்டேட் காட்டப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. ஒரிரு நாளில் இந்த பக் சரியாகும்.
பப்ஜி லைட் என்பது குறைந்த அம்சம் கொண்ட மொபைல் வேரியன்டுகளுக்காகவே உருவாக்கப்பட்டது. எனவே, அதற்கு ஏற்றாற் போலவே புதிய அப்டேட்டுக்களும் வழங்கப்படுகிறது.
முக்கிய அப்டேட்டுக்கள்:
பப்ஜி லைட்டின் முக்கிய அப்டேட்டே அதன் வரிங்க மேப்தான். சில புதிய இடங்கள், கிராபிக்ஸ்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. விளையாடும் போது இந்த அப்டேட்டுக்கள் அனைத்தும் புரிய வரும். தென்மலை பகுதியில் உள்ள சுரங்கப் பாதைகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஸ்லோ மூவில் கேபிள் கார்களும் மேம்பில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்தை கழுகுப் பார்வையில் பார்க்க முடியும்.
புதிய வெப்பன்கள்:
பப்ஜி 0.18.0 அப்டேட்டில் உள்ள புது வெப்பன்கள் P90 சப் மெஷின் துப்பாக்கி, MP5K சப் மெஷின் துப்பாக்கி ஆகும். இவற்றில் MP5K கிளாஸிக் மோடில் இருக்கும் போது, P90 துப்பாக்கி ஏரேனா கேம் மோடில் செயல்படும். கூடுதலாக M16 ரக ரைஃபில்லும் ஸ்டாக்கில் உள்ளது.
மேலும், பப்ஜி வாகனங்கள், பாராசூட்கள், பிளேன் போன்றவை 3டி-யில் நன்றாக தெரியும் வகையில் அதன் கிராபிக்ஸ் மேம்படுத்தப்பட்டுள்ளது.
முதலாமாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பப்ஜியில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய அப்டேட் கேமர்களுக்கு ஒரு சிறப்பு விருந்தாகும். கூகுள் ப்ளே ஸ்டோரில் இதனை அப்டேட் செய்யலாம். இதன் மெமரி 564MB என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Sarvam Maya Set for OTT Release on JioHotstar: All You Need to Know About Nivin Pauly’s Horror Comedy
Europa’s Hidden Ocean Could Be ‘Fed’ by Sinking Salted Ice; New Study Boosts Hopes for Alien Life