ஜியோ தனது ஜிகா ஃபைபர் சர்வீசை வாடிக்கையாளர்களிடம் பிரபலப்படுத்த இ-ஸ்போர்ட்ஸ் இன்னும் உதவும்.
பல்வேறு துறைகளில் அதிரடி காட்டி வரும் ரிலையன்ஸ் ஜியோ, தற்போது இ-ஸ்போர்ட்ஸ் துறையிலும் நுழைந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால், அதற்கான க்ரவுண்ட் ஒர்க் தொடங்கப்பட்டு விட்டன. முதல்கட்டமாக ரியோட் கேம்ஸ் இந்தியாவின் தலைவராக இருந்த அனுராக் குரானாவை இ-ஸ்போர்ட்ஸ் பிரிவின் தலைவராக ரிலையன்ஸ் ஜியோ நியமித்துள்ளது.
இ - ஸ்போர்ட்ஸையும் ரிலையன்ஸ் கையில் எடுக்கும் என்று இந்த துறையில் உள்ளவர்கள் கடந்த சில மாதங்களாக கணித்து வந்தனர். அதற்கு ரிலையன்ஸின் நடவடிக்கைகள் முற்றுப்புள்ளி வைத்துள்ளன. மேலும், குரானா தன்னுடை லிங்கெடின் புரோஃபைலில் ரிலையன்ஸ ஜியோ இ-ஸ்பார்ட்ஸ் பிரிவின் தலைவர் என்று பணியை குறிப்பிட்டுள்ளார்.
மிகப்பெரும் நிறுவனமாக இருந்தபோதிலும், இ-ஸ்போர்ட்ஸ் துறையில் ரிலையன்ஸ் ஜியோ எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பது சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், க்ளாஷ் ராயல், PUBG Mobile போன்றவை நீண்டகாலமாக இ-ஸ்போர்ட்ஸ் கண்காட்சியை நடத்தி வருகின்றன. இதேபோன்று ரிலையன்ஸும் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு புதிய யுக்திகளை கையில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜியோ தனது ஜிகா ஃபைபர் சர்வீசை வாடிக்கையாளர்களிடம் பிரபலப்படுத்த இ-ஸ்போர்ட்ஸ் இன்னும் உதவும். மொபைல் ஃபோன் நிறுவனங்களான நசாரா, யூசிஃபெர் போன்றவை இ-ஸ்போர்ட்ஸ் தொடர்பாக ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வருகின்றன. எப்படிப் பார்த்தாலும், இ-ஸ்போர்ட்ஸில் முத்திரை பதிக்க ரிலையன்ஸ் ஜியோவுக்கு இதுதான் சரியான டைம் என துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Amazon Demands Perplexity Stop AI Tool From Making Purchases