WhatsApp-ல் MP4 File மூலம் ஹேக் செய்ய முடியும் - எந்த வெர்ஷன்களில் ஆபத்துனு தெரிஞ்சுக்கோங்க?

விளம்பரம்
Written by Indo-Asian News Service மேம்படுத்தப்பட்டது: 19 நவம்பர் 2019 13:03 IST
ஹைலைட்ஸ்
  • Facebook நிறுவனமும் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது
  • பழைய வாட்ஸ்அப் வெர்ஷன்களில்தான் இந்த ஹேக்-ஐ செய்ய முடியுமாம்
  • இதன் மூலம் போனிலிருந்து தகவல்களைத் திருட முடியுமாம்

முக்கியமாக, அடையாளம் தெரியாத புது எண்ணிலிருந்து MP4 ஃபைல் உங்களுக்கு வருகிறது என்றால், அதை தரவிறக்கம் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

வாட்ஸ்அப் (WhatsApp) செயலியை ஒரு வித MP4 ஃபைல் மூலம் ஹேக் செய்ய முடியும் என்கின்ற தகவல் வந்துள்ளது. பழைய வாட்ஸ்அப் வெர்ஷன்களில்தான் இந்த ஹெக் சாத்தியம் என்றும், புதிய வெர்ஷன்களில் அப்படி இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, அடையாளம் தெரியாத புது எண்ணிலிருந்து MP4 ஃபைல் உங்களுக்கு வருகிறது என்றால், அதை தரவிறக்கம் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. MP4 ஃபைலை தரவிறக்கம் செய்வதன் மூலம், போனில் இருக்கும் தகவல்களை வேறொரு நபர் ஹேக் செய்ய முடியுமாம். 

இது குறித்து வாட்ஸ்அப்-ன் உரிமையாளரான ஃபேஸ்புக் நிறுவனம், “ஹேக் செய்வதற்கென்று பிரத்யேகமாக ஒரு MP4 ஃபைல் உருவாக்கப்பட்டுள்ளது. அதை வாட்ஸ்அப் பயனர்கள் தரவிறக்கம் செய்யும் பட்சத்தில் போனை ஹேக் செய்ய முடியும்,” என்று தெரிவித்துள்ளது. 

சமீபத்தில் இஸ்ரேலிய மென்பொருள் நிறுவனமான பெகாசஸ் மூலம், இந்தியாவில் இருக்கும் குறிப்பிட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் 1,400 பேரின் வாட்ஸ்அப், ஹேக் செய்யப்பட்டு வேவு பார்க்கப்பட்டதாக பரபரப்புத் தகவல் வெளியானது. இந்திய அரசுக்கும் இந்த ஹேக் நடவடிக்கைக்கும் சம்பந்தம் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அதை முற்றிலும் மறுத்தது மத்திய அரசு. 

வாட்ஸ் அப் நிறுவனமும், இந்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்து, பிரச்னையை சரி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியது. 

இந்நிலையில்தான் இந்த MP4 ஃபைல் மூலம் ஹேக் செய்யும் தகவல் வந்துள்ளது. 2.19.274 -க்கு முந்தைய ஆண்ட்ராய்டு வாட்ஸ்அப் வெர்ஷன், 2.19.100 -க்கு முந்தைய ஐபோன் வாட்ஸ்அப் வெர்ஷன், 2.25.3 -க்கு முந்தைய என்டர்பிரைஸ் வெர்ஷன், 2.19.104 -க்கு முந்தைய வாட்ஸ்அப் பிசினஸ் ஆண்ட்ராய்டு வெர்ஷன், 2.19.100 -க்கு முந்தைய வாட்ஸ்அப் பிசினஸ் ஐஓஎஸ் வெர்ஷன், 2.18.368-வரையிலான விண்டோஸ் வாட்ஸ்அப் வெர்ஷன் உள்ளிட்டவைகளில் இந்த ஹேக் நடவடிக்கையை மேற்க்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: WhatsApp, Hack, WhatsApp Account Hacked, Pegasus
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. சாம்சங்கின் 50MP கேமரா கொண்ட மடிக்கக்கூடிய ஃபோனுக்கு ₹19,000 தள்ளுபடி; சமீபத்திய சலுகையைப் பாருங்கள்
  2. AI உதவியுடன் இன்டர்வியூவில் வென்று ₹1.5 கோடி வேலை பெற்ற நபர்; தனது உத்தியைப் பகிர்ந்துள்ளார்!
  3. ஜியோ ஹோம் 2 மாத திட்டத்தில் 1 மாதம் இலவசம்: 100Mbps இன்டர்நெட், 12 OTT ஆப்ஸ்கள் இலவசம்!
  4. அறிமுகத்திற்கு முன் கசிந்தது விவோ S2 விலை, முழு விவரங்கள் மற்றும் வடிவமைப்பு!
  5. கூகிள் இந்தியாவில் 'ஆஸ்க் கூகிள் பே' என்ற ஜெமினி AI சாட்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது
  6. Paytm தனது செயலியில் பகிரப்பட்ட குழுச் செலவுகளுக்காக பில்களைப் பிரிக்கும் வசதியை அறிமுகப்படுத்துகிறது
  7. ஜெமினியால் இப்போது கூகிள் டாக்ஸில் உள்ள கருத்துகளைப் படிக்கவும்,சுருக்கவும்,பதில்களை வரைவு செய்யவும் முடியும்
  8. சாம்சங் கேலக்ஸி S26 FE போனின் சார்ஜிங் வேகத்தில் மாற்றம் இருக்காது என சான்றிதழ் தளம் மூலம் தெரியவந்துள்ளது!
  9. வாட்ஸ்அப் வெப்பில் குரூப் வீடியோ கால் வசதி அறிமுகம்; குவிக்HD, சத்தம் குறைப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன!
  10. விவோ T5x 5G ஃபியூஷன் ரெட் வண்ண மாடல் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.