வாட்ஸ்அப் தனது சேனல் பக்கத்தில் பயனர்களின் ஈடுபாட்டை (Engagement) அதிகரிக்க 'குவிஸ்' எனும் புதிய வினாடி வினா அம்சத்தைச் சோதித்து வருகிறது
Photo Credit: Reuters
iOS-க்கான சமீபத்திய WhatsApp பீட்டாவில், சேனல்களில் ஈடுபாட்டை அதிகரிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய வினாடி வினா கருவி உள்ளது.
வாட்ஸ்அப் (WhatsApp) தனது பயனர்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கப் புதுப்புது அப்டேட்களை அள்ளி வீசும். அந்த வகையில், தற்போது வாட்ஸ்அப் சேனல் (Channels) அட்மின்களுக்கும், அதைப் பின்தொடரும் ஃபாலோயர்களுக்கும் ஒரு சூப்பரான அப்டேட் வரப்போகிறது. அதுதான் 'சேனல் குவிஸ்' (Channel Quiz).ஏற்கனவே வாட்ஸ்அப் சேனல்களில் 'Polls' எனும் வாக்கெடுப்பு நடத்தும் வசதி இருக்கிறது. ஆனால், அதற்கும் இதற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. 'Polls'-ல் மக்கள் தங்களின் கருத்தைச் சொல்லலாம், அங்கே எதுவுமே தவறான பதில் கிடையாது. ஆனால், இந்த புதிய 'Quiz' வசதியில் ஒரு கேள்விக்குச் சரியான பதில் எது என்பதை அட்மின் ஏற்கனவே முடிவு செய்து வைப்பார். அட்மின்கள் மெசேஜ் அனுப்பும் இடத்திலுள்ள அட்டாச்மென்ட் மெனுவில் (Attachment Menu) இனி 'Quiz' எனும் புதிய ஆப்ஷனைப் பார்ப்பார்கள். அங்கே ஒரு கேள்வியையும், அதற்கான 5 விடைகளையும் (Options) அட்மின்கள் கொடுக்கலாம். இதில் ஏதாவது ஒரு பதிலைச் சரியான விடையாக (Correct Answer) அவர்கள் மார்க் செய்ய வேண்டும்.
ஃபாலோயர்கள் அந்தப் பதில்களில் எதையாவது ஒன்றை கிளிக் செய்யும்போது, அது சரியான விடையாக இருந்தால், அந்தப் பயனர் திரையில் 'கன்பெட்டி' (Confetti) எனப்படும் காகிதப் பூக்கள் வெடித்துச் சிதறுவது போன்ற அனிமேஷன் தோன்றும். இது பயனர்களுக்கு ஒரு கேம் விளையாடுவது போன்ற சுவாரஸ்யத்தைக் கொடுக்கும். ஒருவேளை தவறான பதிலைச் சொன்னால், எது சரியான பதில் என்பதையும் அந்த வாட்ஸ்அப் கார்டு உடனடியாகக் காட்டிவிடும்.
இந்த வசதி கல்வி சார்ந்த சேனல்கள் (Education Channels), செய்திக் குழுக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு (Brands) மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு செய்தியைச் சொல்லிவிட்டு, அது பற்றித் தேர்வுகளை நடத்தி மக்களின் கவனத்தை ஈர்க்கலாம்.
தற்போது இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் (iOS) பீட்டா பயனர்களிடம் சோதிக்கப்பட்டு வருகிறது. 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இது அனைத்து சாதாரண பயனர்களுக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனி வாட்ஸ்அப் சேனல் என்பது வெறும் தகவல்களைப் பெறும் இடமாக மட்டுமில்லாமல், ஒரு சுவாரஸ்யமான விளையாட்டுத் தளமாகவும் மாறப்போகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Paramount's New Offer for Warner Bros. Is Not Sufficient, Major Investor Says