சாம்சங் தனது அடுத்த பிளாக்ஷிப் சீரிஸான Galaxy S26-ன் அறிமுக தேதியை மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளது.
Photo Credit: Samsung
Samsung Galaxy S26 Unpacked பிப்ரவரி 25, 2026; S26, S26+, Ultra லான்ச் அப்டேட்கள்
ஸ்மார்ட்போன் உலகத்துல இப்போ எல்லாரோட பார்வையும் ஒரு பக்கமா தான் திரும்பி இருக்கு. அது வேற எதுவும் இல்ல, சாம்சங்கோட அடுத்த பிரம்மாண்டமான Galaxy S26 Series லான்ச் தான். இவ்வளவு நாளா "ஜனவரில வரும்", "பிப்ரவரி ஸ்டார்டிங்ல வரும்" அப்படின்னு பல பேச்சுக்கள் போயிட்டு இருந்துச்சு. ஆனா இப்போ சாம்சங் நிறுவனமே தெரியாம ஒரு ரகசியத்தை உடைச்சிட்டாங்க. சாம்சங் கல்ஃப் (Samsung Gulf) தன்னோட அதிகாரப்பூர்வமான எக்ஸ் (X) தளத்துல ஒரு போட்டியை அறிவிச்சிருக்காங்க. அதுல வர்ற டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் (Terms and Conditions) பக்கத்தை நோண்டி பார்த்தப்பதான் ஒரு பெரிய உண்மை வெளிச்சத்துக்கு வந்துருக்கு. அந்த பிரச்சாரம் ரெண்டு கட்டமா பிரிக்கப்பட்டிருக்கு. முதல் கட்டம் பிப்ரவரி 24-ஓட முடியுது. ரெண்டாவது கட்டம், அதாவது "Unpacked நிகழ்வுக்கு பிறகு" அப்படிங்கிற பகுதி பிப்ரவரி 25 அன்னைக்கு ஆரம்பமாகுது. இதனால, பிப்ரவரி 25 தான் அந்த "Grand Launch" நாள்னு இப்போ 100% உறுதியாகிடுச்சு.
இந்த சீரிஸ்ல வழக்கம் போல S26, S26 Plus, மற்றும் S26 Ultra-னு மூணு போன்கள் வரும். இதுல எல்லாரும் வெயிட் பண்றது அந்த 'அல்ட்ரா' மாடலுக்கு தான்.
● கேமரா: இதுல 200MP மெயின் கேமரா இருக்கும்னு சொல்லப்படுது. ஆனா இந்த முறை லோ-லைட் போட்டோகிராபிக்கும், 10x ஜூம் ஷாட்களுக்கும் கூகுள் கூடுதல் பவர் கொடுத்திருக்காங்க. "It looks dark, it films bright" அப்படின்னு ஒரு டீசர் வேற வந்துருக்கு.
● பவர்ஃபுல் சிப்செட்: இதுல லேட்டஸ்ட் Snapdragon 8 Elite Gen 5 அல்லது சாம்சங்கோட சொந்த Exynos 2600 சிப்செட் (நாட்டை பொறுத்து) வரப்போகுது. இது கேமிங்ல பட்டைய கிளப்பும்.
● டிஸ்ப்ளே மேஜிக்: 6.9 இன்ச் AMOLED டிஸ்ப்ளேல "Privacy Screen" அப்படிங்கிற ஒரு புது வசதியை கொண்டு வர்றாங்களாம். அதாவது நீங்க போன் யூஸ் பண்ணும்போது சைடுல இருந்து யாராவது பார்த்தா ஸ்கிரீன் பிளரா (Blur) தெரியுமாம்.
பிப்ரவரி 25 அன்னைக்கு அறிமுகமானாலும், ப்ரீ-ஆர்டர் (Pre-order) பிப்ரவரி 26-ல இருந்து தான் ஆரம்பமாகும். மார்ச் 11-ல இருந்து இது இந்திய கடைகள்ல நேரடியா கிடைக்கும்னு எதிர்பார்க்கப்படுது. S26 Ultra-வோட ஆரம்ப விலை சுமார் ரூ. 1,35,000 ரேஞ்சுல இருக்கலாம். மத்த ரெண்டு மாடல்களும் ரூ. 80,000 முதல் ரூ. 1,00,000 வரை இருக்கலாம்.
இன்னொரு செம அப்டேட் என்னன்னா, சாம்சங் ஒருவழியா தன்னோட அந்த பழைய 45W சார்ஜிங்கை விட்டுட்டு, S26 Ultra-ல 60W ஃபாஸ்ட் சார்ஜிங்கை அறிமுகம் பண்ணப்போறாங்க. இதனால 30 நிமிஷத்துலயே 75% சார்ஜ் ஏறிடும்னு சொல்லுறாங்க.
சோ மக்களே, பிப்ரவரி 25-க்கு இன்னும் சில நாட்கள்தான் இருக்கு. இந்த தடவை ஐபோனை ஓவர்-டேக் பண்ண சாம்சங் என்னென்ன ஏஐ (AI) வித்தைகளை காட்டப்போறாங்கன்னு பொறுத்திருந்து பார்ப்போம். நீங்க இந்த மூணுல எந்த மாடலுக்கு வெயிட்டிங்? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale