ஐடெல் நிறுவனம் தனது புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான Itel A100-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
Photo Credit: Itel
Itel A100 4G இந்தியாவில் ரூ.6,799; 90Hz டிஸ்ப்ளே, 5000mAh, 8MP, மிலிட்டரி பாதுகாப்பு உடன்
இன்னைக்கு நாம பார்க்கப்போறது ஒரு மிரட்டலான பட்ஜெட் போனை பத்திதான். நீங்க போனை அடிக்கடி கீழே போடுற ஆளா? இல்லனா உங்க ஊர்ல நெட்வொர்க் சிக்னல் அடிக்கடி கட் ஆகுமா? அப்போ ஐடெல் (Itel) கொண்டு வந்திருக்கிற இந்த Itel A100 உங்களுக்கான போன் தான். வெறும் ₹7,000 பட்ஜெட்ல ஒரு போன் இவ்வளவு விஷயங்களை செய்யுமான்னு நீங்களே ஆச்சரியப்படுவீங்க. இந்த போனோட மிக முக்கியமான ஹைலைட்டே இதோட உறுதித்தன்மை தான். இதுக்கு MIL-STD-810H அப்படிங்கிற மிலிட்டரி கிரேடு சான்றிதழ் கிடைச்சிருக்கு. அதாவது, சாதாரண போன்களை விட இது கீழே விழுந்தாலோ இல்ல சின்ன சின்ன அதிர்வுகள் ஏற்பட்டாலோ சீக்கிரம் உடையாது. பட்ஜெட் விலையில இப்படி ஒரு முரட்டுத்தனமான பில்ட் குவாலிட்டியை ஐடெல் கொடுத்திருக்கிறது பாராட்ட வேண்டிய விஷயம். அதுமட்டும் இல்லாம, IPX4 ரேட்டிங் இருக்குறதால லேசான மழை சாரல் பட்டா கூட இந்த போன் தாங்கும்.
இந்த போன்ல "Ultralink" அப்படிங்கிற ஒரு புது வசதியை ஐடெல் அறிமுகம் பண்ணிருக்காங்க. இது என்ன பண்ணும்னா, உங்க ஊர்ல இல்லனா நீங்க இருக்குற இடத்துல மொபைல் சிக்னலே இல்லைனாலும், மத்த ஐடெல் பயனர்களுக்கு அவசர கால தகவல் தொடர்பு முறையை பயன்படுத்தி கால் பேச வழிவகுக்கும். மலைப்பிரதேசங்கள்ல இருக்குறவங்களுக்கும், சிக்னல் கம்மியா இருக்குற கிராமங்கள்ல இருக்குறவங்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம்.
பின்னாடி பக்கம் 8MP மெயின் கேமராவும், செல்ஃபிக்கு 5MP கேமராவும் இருக்கு. இது சாதாரண போட்டோக்களுக்கும், வீடியோ கால்களுக்கும் போதுமானதா இருக்கும். பேட்டரியை பொறுத்தவரை 5000mAh பேட்டரி கொடுத்திருக்காங்க. 10W சார்ஜிங் வசதி உண்டு. ஒரு தடவை சார்ஜ் போட்டா ஒரு நாள் முழுக்க தாராளமா வரும்.
இந்த போன்ல IR Blaster இருக்கு. இதனால உங்க வீட்டு டிவி, ஏசி-யை உங்க போன் மூலமாவே கண்ட்ரோல் பண்ணிக்கலாம். பாதுகாப்புக்காக சைடு மவுண்டட் பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் பேஸ் அன்லாக் (Face Unlock) வசதி இருக்கு.
● 3GB + 64GB வேரியண்ட்: ₹6,799
● 4GB + 64GB வேரியண்ட்: ₹7,499 இன்னொரு செம விஷயம் என்னன்னா, போன் வாங்கின முதல் 100 நாட்களுக்குள்ள தெரியாம உங்க ஸ்கிரீன் உடைஞ்சா, அதை ஐடெல் இலவசமாவே மாத்தி தர்றாங்க.
சோ மக்களே, ₹7,000-க்குள்ள ஒரு ஸ்ட்ராங்கான, 90Hz டிஸ்ப்ளே இருக்குற, நெட்வொர்க் இல்லாமலும் பேச முடியுற ஒரு போன் வேணும்னா நீங்க தாராளமா Itel A100-ஐ வாங்கலாம். இது பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo Y600K Turbo Surfaces on Google Play Console; Launch Seems Imminent
BGMI Redeem Codes for September 21: How to Get Secret Legacy Backpack and Other Free Rewards
iPhone 20 Pro Could Get a Major Display Redesign With Quad-Curved Panel