WhatsApp: வாட்ஸ்ஆப் நிறுவனம், தங்களது வாடிக்கையாளர்களை உடனடியாக இந்த செயலியினை புதிய வெர்சனுக்கு அப்டேட் செய்துகொள்ளும்படி அறிவுருத்தியுள்ளது.
கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்ட வாட்ஸ்ஆப் செயலியில் ஒரு பாதிப்பு ஏற்பட்டதால், இந்த செயலியில் ஒரே ஒரு மிஸ்ட் காலின் மூலமாக மொபைல்போன்கள் ஸ்பைவேர் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. மேலும் இந்த தாக்குதல் குறித்து பேஸ்புக்-ன் துணை நிறுவனம் அறிவித்துள்ள அறிவிப்பில்,"ஒரு உயர்தரமான சைபர் செயலி" இந்த மே மாத துவக்கத்திலிருந்து அறியப்படாத எண்ணிலான மக்களின் வாட்ஸ்ஆப் கணக்குகளை தாக்கியது என குறிப்பிட்டிருந்தனர். மேலும், இது குறித்து வாட்ஸ்ஆப்-ன் மக்கள் தொடர்பாளர் கூறுகையில், இந்த சைபர் தாக்குதலால் எத்தனை பேர் பாதித்துள்ளனர் என்பது சரியாக தெரியவில்லை எனவும் கூறியிருந்தார்.
மற்றும் இது குறித்து பைனான்சியல் டைம்ஸ்(Financial Times) பத்திரிக்கையும் செய்தி வெளியிட்டிருட்ந்தது. அதன்படி இந்த தாக்குதலுக்கு பின் இருப்பது இஸ்ரேலை சேர்ந்த என் எஸ் ஓ(NSO) என்ற அமைப்பு என்றும், பெகசுஸ் என்ற மென்பொருளின் உதவியுடனே இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்கள் என்றும் கூறியிருந்தது. இந்த பிரச்னை குறித்து வாட்ஸ்ஆப் நிறுவனம் மேலும் கூறுகையில், இந்த தாக்குதல் நடக்காமல் இருப்பதற்கான தீர்வை தேடி வருகிறோம், மேலும் இதற்கான அப்டேட்டை வெகுவிரவில் வெளியிடுவோம் எனவும் கூறியிருந்தது.
தற்போது வாட்ஸ்ஆப் நிறுவனம் கூறியுள்ள அறிவிப்பில், தங்களது வாடிக்கையாளர்களை இந்த செயலியினை புதிய வெர்சனுக்கு அப்டேட் செய்துகொள்ளும்படி அறிவுருத்தியுள்ளது.
இந்த செயலியின் புதிய வெர்சனை எப்படி அப்டேட் செய்வது? உங்கள் ஸ்மார்ட்போன் புதிய வெர்சன் வாட்ஸ்ஆப்பை கொண்டு தான் செயல்படுகிறதா என்பதை எப்படி அறிந்துகொள்ளவது?
ஒருவேளை நீங்கள் ஐபோன் பயன்பாட்டாளராக இருந்தால்!
முதலில் உங்கள் ஸ்மார்ட்போனிலுள்ள ஆப் ஸ்டோரை ஓபன் செய்யுங்கள்.
பின் அதில் வலதுபுறத்தின் கீழேவுள்ள 'அப்டேட்' பட்டனை அழுத்துங்கள்.
உங்கள் வாட்ஸ்ஆப் செயலி, புதிய வெர்சனுக்கு அப்டேட் செய்யப்படவில்லை என்றால், அங்கு 'அப்டேட்' என்ற தேர்வு இருக்கும். அதை அழுத்தி அப்டேட் செய்துகொள்ளுங்கள்.
ஒருவேளை நீங்கள், புதிய வெர்சன் வாட்ஸ்ஆப்பை அப்டேட் செய்திருந்தால், அங்கு 'ஓபன்' என்ற தேர்வு இருக்கும்.
மேலும் உங்களுடைய வாட்ஸ்ஆப் செயலி, அதன் புதிய வெர்சனான 2.19.51 என்ற வெர்சனில் இருக்கிறதா என்பதையும் உறுதி செய்துகொள்ளுங்கள்.
ஒருவேளை நீங்கள் ஆண்ட்ராய்ட் போன் பயன்பாட்டாளராக இருந்தால்!
முதலில் உங்கள் ஸ்மார்ட்போனிலுள்ள கூகுள் ப்லே ஸ்டோரை ஓபன் செய்யுங்கள்.
அதில் "மை ஆப்ஸ் & கேம்ஸ்" பாகத்திற்கு செல்லுங்கள்.
அதில் உங்கள் வாட்ஸ்ஆப் செயலி, புதிய வெர்சனுக்கு அப்டேட் செய்யப்படவில்லை என்றால், அங்கு 'அப்டேட்' என்ற தேர்வு இருக்கும். அதை அழுத்தி அப்டேட் செய்துகொள்ளுங்கள்.
ஒருவேளை நீங்கள், புதிய வெர்சன் வாட்ஸ்ஆப்பை அப்டேட் செய்திருந்தால், அங்கு 'ஓபன்' என்ற தேர்வு இருக்கும்.
மேலும் உங்களுடைய வாட்ஸ்ஆப் செயலி, அதன் புதிய வெர்சனான 2.19.134 என்ற வெர்சனில் இருக்கிறதா என்பதையும் உறுதி செய்துகொள்ளுங்கள்.
© The Washington Post 2019
We discussed what WhatsApp absolutely needs to do in 2019, on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Ek Deewane Ki Deewaniyat Is Streaming Now: Know Where to Watch the Romance Drama Online
Realme Neo 8 Said to Feature Snapdragon 8 Gen 5 Chipset, Could Launch Next Month
Revolver Rita Is Now Streaming Online: Know Where to Watch the Tamil Action Comedy
Oppo Reno 15 Series Tipped to Get a Fourth Model With a 7,000mAh Battery Ahead of India Launch