உலகளவில் தகவல் பரிமாற்றத்துக்கு அதிகம் பயன்படுத்தப்படும் தளமாக உருவெடுத்துள்ளது வாட்ஸ்அப். ஃபேஸ்புக் நிறுவனத்தின் துணை நிறுவனமான வாட்ஸ்அப், 2017 ஆம் ஆண்டு, அனுப்பும் மெஸேஜ்களை நீக்க ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டது. இதன் மூலம், ஒருவர் அனுப்பும் வீடியோ, ஆடியோ, போட்டோ அல்லது தகவல்களை நிரந்தரமாக நீக்க முடியும். இந்த ஆப்ஷனை பயன்படுத்தி மெஸேஜ்களை நீக்கினால், மீண்டும் அனுப்பியவரால் கூட அதைப் பார்க்க முடியாது. ஆனால், அந்த மெஸேஜ்களைப் பார்ப்பதற்கு ஒரு வழி இருக்கிறது.
வாட்ஸ்அப் நிறுவனத்தால் வெளியிடப்படாத ஒரு வசதியை வேறு வழியில் பயன்படுத்தினால் அதற்குரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். நாங்கள் சொல்லும் இந்த முறையின் மூலம் டெலிட் செய்த மெஸேஜ்களைத் திரும்பப் பெறலாம். ஆனால், இன்னொரு செயலியைப் பயன்படுத்தி இந்த வசதியைப் பெற நேரும் என்பதால், அந்த செயலிக்கு உங்களது தனிப்பட்ட தகவல்கள் தெரியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். எனவே, சொந்த விருப்பத்தின் பேரில் மட்டும் இந்த வழியைப் பின்பற்றுங்கள்.
எப்படி நீக்கிய வாட்ஸ்அப் மெஸேஜ்களைத் திரும்பப் பெறுவது:
1.WhatsRemoved+ என்னும் செயலியை கூகுள் ப்ளேவிலிருந்து தரவிறக்கம் செய்யுங்கள்.
2.தரவிறக்கம் செய்த பின்னர், அந்த செயலிக்குள் நுழைந்து, அது கேட்கும் அனைத்து விஷயங்களுக்கும் அனுமதி கொடுத்துவிடவும்.
3.இப்போது ஹோம்-பேஜ் சென்று மீண்டும், செயலியை திறக்கவும். எந்த செயலியின்/செயலிகளின் நோட்டிஃப்பிகேஷன்களைப் பெற வேண்டும் என்று கேட்கப்படும். ஒரு பட்டியல் வரும். அந்தப் பட்டியலில் WhatsApp-ஐ செலக்ட் செய்து அடுத்த பக்கத்திற்குச் செல்லவும்.
4.இப்போது வரும் ஸ்கீரினில் Yes, Save Files என்பதை சொடுக்கி Allow என்பதை தேர்வு செய்யவும். இதன் மூலம் செட்டிங் செய்வது முடிவுக்கு வரும்.
5.இப்போது வாட்ஸ்அப்பில் வரும் அனைத்து மெஸேஜ்களும், நீக்கிய மெஸேஜ்கள் உட்பட அனைத்தும் WhatsRemoved+ செயலியிலும் வந்துவிடும். அந்த செயலியை ஓப்பன் செய்து, வாட்ஸ்அப் என்பதை க்ளிக் செய்தால் அனைத்து மெஸேஜ்களையும் பார்க்க முடியும்.
ஆண்ட்ராய்டு போன்களுக்கு மட்டுமே இதைப் போன்ற ஆப்ஷன் உள்ளது. ஆப்பிள் போன்களுக்கு இதைப் போன்ற எந்த செயலியும் இல்லை.
நாங்கள் ஆண்ட்ராய்டு தளத்தில் கிடைக்கும் பல்வேறு செயலிகளைப் பயன்படுத்தி, நீக்கிய மெஸேஜ்களை திரும்பப் பெறப் பார்த்தோம். எதுவும் WhatsRemoved+ போல இருக்கவில்லை. இந்த செயலியில் அதிக விளம்பரங்கள் வருகின்றன. அவைகளை, ஒரு முறை 100 ரூபாய் செலுத்துவதன் மூலம் நீக்கிவிட முடியும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்