கொரோனா வைரஸ்: ரூ.100 கோடி மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை வழங்குகிறது டிக்டாக்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 2 ஏப்ரல் 2020 11:09 IST
ஹைலைட்ஸ்
  • டிக்டோக், மருத்துவ உபகரணங்களுக்கு ரூ.100 கோடி நன்கொடை வழங்கியது
  • நன்கொடை 4,00,000 ஹஸ்மத் அங்கிகள் & 2,00,000 முகமூடிகள் ஆகியவை அடங்கும்
  • பாதுகாப்பு கியர் பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களை பூர்த்தி செய்கிறது

டிக்டாக் என்பது ஆண்ட்ராய்டு மற்றும் iOS-ல் இலவச வீடியோ ஷேரிங் செயலியாகும்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவிவருவதால், இந்தியாவில் சுமார் 1,965 பேர் பாதிப்படைந்துள்ள நிலையில், இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க, மத்திய அரசு நிதி திரட்டி வரும் நிலையில், பல்வேறு வங்கிகளும், நிதி நிறுவனங்களும், பிரபல நடிகர்களும் அவர்களால் முடிந்த நிதியை வழங்கியுள்ளனர். அந்த வரிசையில் தற்போது சமூக வலைதள செயலியான டிக்டாக்-கும் இணைந்துள்ளது. 

மருத்துவர்களும், பிற மருத்துவ பணியாளர்களும், வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைச் சமாளிக்க அயராது உழைக்கிறார்கள். எனவே, இந்தியாவில் உள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு ரூ.100 கோடி மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களான, 4,00,000 ஹஸ்மத் மருத்துவ பாதுகாப்பு அங்கிகள் மற்றும் 2,00,000 முகமூடிகளை வழங்குவதாக TikTok அறிவித்தது. மருத்துவ சாதனங்களை சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு வழங்க, மத்திய ஜவுளி அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுவதாக டிக்டாக் கூறியது. 

உள்ளூர் / மாநில அளவிலான மருத்துவ பணியாளர்களுக்காக 2,00,000 முகமூடிகளை டெல்லி மற்றும் மகாராஷ்டிரா அரசுக்கு டிக்டோக் வழங்கியுள்ளது. மேலும், வரும் காலங்களில், நிலைமை தீவிரமானால், அதிக நன்கொடைகளை வழங்கவும் தயாராக உள்ளோம் என்று டிக்டாக் கூறியுள்ளது. 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: TikTok, Coronavirus, Covid 19
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Motorola Razr 60: போன்ல வைரங்கள் பதிக்கப்பட்டு வந்தாச்சு! அசத்தலான Brilliant Collection!
  2. Oppo K13 Turbo சீரிஸ்: போனுக்குள்ளயே ஃபேன் வச்சு மாஸ் காட்ட வர்றான்! இந்தியால ஆகஸ்ட் 11-ல் லான்ச்!
  3. Vivo Y400 5G லான்ச்! Snapdragon 4 Gen 2 SoC-வோட கலக்கப் போகுது!
  4. Amazon சேல்ல லேப்டாப் வாங்க இதுதான் சரியான நேரம்! ரூ. 60,000-க்குள்ள டாப் பிராண்டுகளின் மாஸ் டீல்ஸ்!
  5. Motorola G86 Power 5G: ஒருமுறை சார்ஜ் போட்டா மூணு நாள் வரும்! அம்சங்கள் கேட்டா அசந்து போவீங்க!
  6. கேமர்களுக்கு ஒரு குட் நியூஸ்! Acer Nitro Lite 16 லேப்டாப் வந்தாச்சு! விலை கேட்டா ஷாக் ஆவீங்க!
  7. இந்த போன் சார்ஜ் போட்டா போதும்... மூணு நாள் வரும்! Oppo Find X9 Pro-வின் மிரட்டல் அம்சங்கள்!
  8. ஐபோன் 17 வாங்க காத்திருப்போர்க்கு சூப்பர் நியூஸ்! புதிய கலர்களில் ஜொலிக்கப் போகுது
  9. Vivo Y31 5G: இந்தியால கெத்து காட்ட வருதா? என்னலாம் எதிர்பார்க்கலாம்?
  10. அறிமுகமாகிறது Primebook 2 Neo: 8GB RAM, Full HD டிஸ்ப்ளே - வாங்கலாமா?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.