டிக்டாக் உள்டப பல சீன செயலிகள், பயனர்களின் MAC முகவரியை குறுக்கு வழியில் திரட்டியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
MAC முகவரி, IMEI எண்கள் ஆகியவற்றை செயலிகள் எடுப்பதற்கு கூகுள் தடை விதித்துள்ளது.
டிக்டாக் ஆப் விதிமுறைகளை மீறி பயனர்களின் தனிப்பட்ட MAC முகவரி விவரங்களை திரட்டியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லைத் தகராறு ஏற்பட்டதையடுத்து, டிக்டாக் உள்ளிட்ட சீன சார்ந்த செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. மேலும், அமெரிக்காவிலும் டிக்டாக்கை தடை விதிக்கப்பட்டு, 45 நாட்களில் இந்த தடை அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது டிக்டாக் மீது மற்றொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (The Wall Street Journal) செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஸ்மார்ட்போன்களில் Media Access Control (MAC) எனப்படும் முகவரி, போனின் தனிப்பட்ட முகவரி ஆகும். இந்த MAC முகவரி, IMEI எண்கள் ஆகியவற்றை செயலிகள் எடுப்பதற்கு கூகுள் தடை விதித்துள்ளது.
டிக்டாக் உள்டப பல சீன செயலிகள், பயனர்களின் MAC முகவரியை குறுக்கு வழியில் திரட்டியிருப்பதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. இவ்வாறு சுமார் 15 மாதங்களாக , லட்சக்கணக்கான பயனர்களிடத்தில் இருந்து தனிப்பட்ட அடையாள எண்களை கடந்த நவம்பர் மாதம் வரையில் டிக்டாக் திரட்டியுள்ளது.
முன்னதாக கடந்த 2013 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோனில், MAC முகவரியை மூன்றாம் தரப்பு ஆப் டெலவ்பர்கள் எடுப்பதை தடை செய்தது. அதனைத் தொடர்ந்து கூகுள் நிறுவனமும் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது பிளே ஸ்டோரில் உள்ள செயலிகள், பயனர்களின் MAC முகவரியை எடுக்கக்கூடாது என்று தடை விதித்தது.
ஆனால், இத்தகைய விதிமுறைகளை எல்லாம் மீறி டிக்டாக் செயலி குறுக்கு வழியில் நூதனமாக MAC முகவரியை எடுத்துள்ளது. பயனர்களுக்கு விளம்பரங்களைக் காட்டுவதற்காக இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதே போல், அமெரிக்கப் பயனர்களின் இந்தத் தகவல்களை சீனாவுக்கு வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
In 2020, will WhatsApp get the killer feature that every Indian is waiting for? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
IFA 2026: Lenovo Unveiled New IdeaPad, Yoga and ThinkBook Laptops
IFA 2026: Nvidia RTX Spark PCs, Local AI Tools Announced With October Launch Planned
Luna Band Now Available Globally: Check Price in India, Specifications and Features