இந்திய அரசாங்கத்திற்கு ஹஸ்மத் அங்கிகளை வழங்க மத்திய ஜவுளி அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுவதாக டிக்டாக் கூறுகிறது.
டிக்டாக் என்பது ஆண்ட்ராய்டு மற்றும் iOS-ல் இலவச வீடியோ ஷேரிங் செயலியாகும்
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவிவருவதால், இந்தியாவில் சுமார் 1,965 பேர் பாதிப்படைந்துள்ள நிலையில், இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க, மத்திய அரசு நிதி திரட்டி வரும் நிலையில், பல்வேறு வங்கிகளும், நிதி நிறுவனங்களும், பிரபல நடிகர்களும் அவர்களால் முடிந்த நிதியை வழங்கியுள்ளனர். அந்த வரிசையில் தற்போது சமூக வலைதள செயலியான டிக்டாக்-கும் இணைந்துள்ளது.
மருத்துவர்களும், பிற மருத்துவ பணியாளர்களும், வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைச் சமாளிக்க அயராது உழைக்கிறார்கள். எனவே, இந்தியாவில் உள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு ரூ.100 கோடி மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களான, 4,00,000 ஹஸ்மத் மருத்துவ பாதுகாப்பு அங்கிகள் மற்றும் 2,00,000 முகமூடிகளை வழங்குவதாக TikTok அறிவித்தது. மருத்துவ சாதனங்களை சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு வழங்க, மத்திய ஜவுளி அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுவதாக டிக்டாக் கூறியது.
உள்ளூர் / மாநில அளவிலான மருத்துவ பணியாளர்களுக்காக 2,00,000 முகமூடிகளை டெல்லி மற்றும் மகாராஷ்டிரா அரசுக்கு டிக்டோக் வழங்கியுள்ளது. மேலும், வரும் காலங்களில், நிலைமை தீவிரமானால், அதிக நன்கொடைகளை வழங்கவும் தயாராக உள்ளோம் என்று டிக்டாக் கூறியுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Cat Adventure Game Stray is Reportedly Coming to PS Plus Essential in November