தரவை திருடும் சர்ச்சைக்குரிய 24 செயலிகளை கூகுள் பிளே ஸ்டோர் அகற்றியதாக கூறப்படுகிறது. இந்த செயலிகள், கூகுளின் செயலி சந்தையில் விநியோகிக்க பல டெவலப்பர் கணக்குகளைப் பயன்படுத்தும் ஒரு சீன நிறுவனத்தைச் சேர்ந்தவை என்று கூறப்படுகிறது. வைரஸ் எதிர்ப்பு செயலிகள் ஆண்ட்ராய்டு பயனர்களிடம் கேட்கும் பல்வேறு அனுமதிகளைத் தேடும் VPN Pro-வில் உள்ளவர்களால் இந்த செயலிகள் முதலில் கவனிக்கப்பட்டன.
VPN Pro-வின் blog post படி, TCL கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான ஷென்சென் HAWK என்ற சீன நிறுவனம் கூகுள் பிளே ஸ்டோர் வழியாக 382 மில்லியன் ஒட்டுமொத்த பதிவிறக்கங்களுடன் 24 செயலிகளை வழங்கி வருகிறது. இந்த செயலிகள் ஆபத்தான அனுமதிகளைக் கேட்டன, சிலவற்றில் மால்வேர் மற்றும் ரோக்வேர் கூட இருந்தன. ரோக்வேர் செயலிகல் சிக்கல்களைக் கண்டறிந்து சரிசெய்வதாக பாசாங்கு செய்கின்றன, அதே நேரத்தில் பணம் செலுத்தும்படி அல்லது அதிக மால்வேரை சேர்க்கவும் உங்களை நம்ப வைக்க முயற்சிக்கின்றன என்று சோபோஸ் கூறுகிறார்.
ஷென்சென் HAWK வழங்கும் சில செயலிகளில் 10 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களுடன் Weather Forecast, 100 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கொண்ட Sound Recorder, 50 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கொண்ட File Manager, 100 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கொண்ட Super Cleaner மற்றும் 100 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களுடன் Virus Cleaner 2019 ஆகியவை அடங்கும். அறிக்கையின் முடிவில் முழு பட்டியலையும் நீங்கள் காணலாம்.
செவ்வாயன்று ஃபோர்ப்ஸ் இந்த செயலிகளைப் பற்றி Google-ஐ அணுகியதும், நிறுவனம் பிளே ஸ்டோரிலிருந்து விரைவாக அவற்றை அகற்றியதும் வலைப்பதிவில் சேர்த்தது.
"பாதுகாப்பு மற்றும் தனியுரிமை மீறல்கள் பற்றிய அறிக்கைகளை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம்" என்று, கூகுள் ஃபோர்ப்ஸிடம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. "எங்கள் கொள்கைகளை மீறும் நடத்தை கண்டால், நாங்கள் நடவடிக்கை எடுப்போம்."
கூகுள், ஷென்சென் HAWK செயலிகளை அகற்றிய பின்னர், அதன் செயலிகளுடன் நிறுவனத்தின் கவலைகளைப் புரிந்துகொள்ள கூகுள் உடன் இணைந்து செயல்படுவதாக, TCL Corporation VPN Pro-க்கு பதிலளித்தது. வாடிக்கையாளர்களை நிம்மதியடையச் செய்வதற்காக நிறுவனம் தனது செயலிகளின் பாதுகாப்பு தணிக்கை நடத்தவும் திட்டமிட்டுள்ளது. ஷென்சென் HAWK வழங்கும் பல ஆப்ஸ் சலுகைகள் Alcatel மற்றும் TCL கார்ப்பரேஷனால் விற்கப்படும் பிற போன்களில் முன்பே ஏற்றப்படுகின்றன.
உங்கள் போன்களில் இந்த செயலிகள் ஏதேனும் இன்ஸ்டால் செய்திருந்தால், நீங்கள் உடனடியாக அதை uninstall செய்வது நல்லது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்