Photo Credit: Joel Saget/ AFP
Tik Tok App: டிக்டாக் ஆப் மீதான தடை நீக்கப்பட்ட பொழுதிலும் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகிய இரண்டிலும் டிக்டாக் ஆப் கிடைக்கவில்லை - சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை தடைவிதித்த 2 நாட்களுக்குப் பின்னர் டிக்டாக் வீடியோ பகிர்வை தடை செய்ததத்டுஅன் அதன் பயன்பாட்டிற்கும் தடை விதிக்கப்பட்டது.
எலக்ட் ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஆதாரங்கள், நீதிமன்ற உத்தரவைப் பெற்ற பிறகு, தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் ஏப்ரல் 3 முதல் டிக்டாக்கை பயன்படுத்த தடை விதிக்க அழைப்பு விடுத்த நிலையில் உச்ச நீதிமன்றம் அதற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது. சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட உடனே கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் ஆப்பை நீக்கி விட்டது தகவல் தொழில் நுட்ப அமைச்சகம்.
மதுரை வழக்கறிஞர் முத்துக்குமார் தொடர்ந்த வழக்கில் டிக்டாக் (Tik Tok app) ஆப்பிற்கு இடைக்காலத் தடை வழங்கப்பட்டது. டிக்டாக் வீடியோக்களில் ஆபாசத்தை ஊக்குவிக்கும் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யக்கூடாது என்று நிபந்தனைக்கு உட்படுத்தப்பட்டது.
டிக்டாக் ஆப் சீன நாட்டு நிறுவனமான பைட்டான்ஸ்க்கு உரிமையானதாகும். இந்தியாவில் மாதம் 120 மில்லியன் பயன்பாட்டாளர்கள் இதை பயன்படுத்தி வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை காலை முதல் கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் டிக்டாக் ஆப்பினை தேடியபோது இல்லை என்றே வந்தது.
அதிகாரப்பூர்வ தகவல்கள் வரும் வரை டிக்டாக் மீது இருக்கும் தடையை நீக்க முடியாது என்று கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.
டிக்டாக் நிறுவனம் இந்த தடை நீக்கத்தை வெகுவாக ஆதாரித்தது. டிக்டாக் பிளாட்ஃபார்ம் தங்களின திறமை வெளிப்படுத்தும் தளமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்