பேஸ்புக்கின் தீம் நீல வண்ணத்தில் இருக்கும். ஆனால் வைரஸ் ஓப்பன் செய்யும் பிரவுசரில் உள்ள பேஸ்புக் பக்கம் கருப்பு நிறத்தில் இருந்தால் நமது தகவல்கள் திருடப்படுகின்றன என்பதை புரிந்து கொள்ளலாம்.
Photo Credit: Evina
பெரும்பாலான ஆப்கள் வால்பேப்பர், வீடியோ எடிட்டிங் தொடர்புடையவை.
பேஸ்புக் யூசர்களின் பாஸ்வேர்டுகளை திருடிய புகாரின்பேரில், 25 ஆப்களை கூகுள் ப்ளே ஸ்டோர் அதிரடியாக நீக்கியுள்ளது. இந்த தகவலை பிரான்ஸ் நாட்டின் சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ஈவினா வெளியிட்டுள்ளது.
இந்த 25 ஆப்களும் சுமார் 25 லட்சம் முறை டவுன்லோடு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆப்களில் சில கடந்த 2 ஆண்டுகளாக கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்ததாக ஈவினா தெரிவித்துள்ளது.
முன்னதாக, 25 ஆப்கள் பயனர்களின் தகவல்களை திருடும் என ஈவினா கூகுள் ப்ளே ஸ்டோருக்கு மே மாதம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன் அடிப்படையில் தீங்கு விளைவிக்கும் ஆப்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான ஆப்கள் வால்பேப்பர், வீடியோ எடிட்டிங் தொடர்புடையவை.
இந்த ஆபத்தான ஆப்களை யூசர்கள் டவுன்லோடு செய்து மொபைலில் பயன்படுத்துகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் பேஸ்புக் ஆப்பை பயன்படுத்தும்போது, அதேநேரத்தில் மால்வேர் வைரஸ் மற்றொரு பிரவுசரை ஓப்பன் செய்துவிடும். ஆனால் அது பேஸ்புக்காக இருக்காது. அதில் தகவல் அளிக்கும்போது பாஸ்வேர்டு உள்ளிட்ட விஷயங்கள் திருடப்பட்டு விடும்.
குறிப்பாக பேஸ்புக்கின் தீம் நீல வண்ணத்தில் இருக்கும். ஆனால் வைரஸ் ஓப்பன் செய்யும் பிரவுசரில் உள்ள பேஸ்புக் பக்கம் கருப்பு நிறத்தில் இருந்தால் நமது தகவல்கள் திருடப்படுகின்றன என்பதை புரிந்து கொள்ளலாம்.
In 2020, will WhatsApp get the killer feature that every Indian is waiting for? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Kepler and TESS Discoveries Help Astronomers Confirm Over 6,000 Exoplanets Orbiting Other Stars
Rocket Lab Clears Final Tests for New 'Hungry Hippo' Fairing on Neutron Rocket