விளம்பர மோசடி முதல் தீங்கு விளைவிக்கும் கோட்களை விதைப்பது வரை தீங்கிழைக்கும் நடத்தைகளில் ஈடுபடும் செயலிகளை அகற்றுவதில் Google Play Store தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் விழிப்புணர்வு அணுகுமுறை இருந்தபோதிலும், சில மால்வேர்களை நிரம்பிய செயலிகள் அவ்வப்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் காணப்படுகின்றன மற்றும் மில்லியன் கணக்கிலான பதிவிறக்கங்களை பெற்ற பின் கூட அந்த செயலி நீக்கப்பட்டிருக்கிறது. அப்படி தற்போது பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்ட செயலி CamScanner-தான், இது ஆவணங்களின் புகைப்படங்களை PDF வடிவமாக மாற்றும் ஒரு செயலி மற்றும் பயனர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ள ஒரு செயலி. கேம்ஸ்கேனரில் மால்வேர்கள் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது, இது விளம்பரங்களை விதைக்கக்கூடியது மற்றும் கட்டண சேவைகளுக்கு பதிவுபெற பயனர்களைத் தூண்டுகிறது என்ற காரணங்களுக்காக இந்த செயலி நீக்கப்பட்டது.
காஸ்பர்ஸ்கி (Kaspersky) ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகளின்படி, கேம்ஸ்கேனரின் சமீபத்திய பதிப்புகள் தீங்கிழைக்கும் தொகுதி கொண்ட விளம்பரங்களுடன் உள்ளது. இந்த செயலியில் அடையாளம் காணப்பட்ட "ட்ரோஜன்-டிராப்பர்.ஆண்ட்ராய்டுஓஎஸ்.நெக்ரோ.என்" ("Trojan-Dropper.AndroidOS.Necro.n”) தீங்கிழைக்கும் மால்வேர், முன்னர் சில சீன செயலிகளிலும் காணப்பட்டது. இந்த மால்வேர் என்ன செய்யும் என்றால் தீங்கிழைக்கும் மற்ற மால்வேர்களை தானாகவே செயல்படுத்தும்.
ட்ரோஜன் டவுன்லோடர் என கண்டறியப்படும் ஆதாரத்துடன் இணைக்கப்பட்ட இந்த தொகுதி, “கைவிடப்பட்ட” தொகுதி என்றும் அழைக்கப்படுகிறது, இது இன்னும் தீங்கு விளைவிக்கும் தொகுதிக்கூறுகளைப் பதிவிறக்கம் செய்து செயல்படுத்துகிறது. அதன்பிறகு, ஏற்படும் தீங்குகள் இந்த மால்வேர்கள் எவ்வாறு சுரண்ட விரும்புகிறது என்பதைப் பொறுத்தது. இது தீங்கிழைக்கும் தொகுதி ஊடுருவும் விளம்பரங்களைக் காண்பிக்கும் மற்றும் கட்டண சேவைகளுக்கு பயனர்களை பதிவு செய்ய தூண்டும். இந்த விஷயத்தில் 100 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கொண்ட கேம்ஸ்கேனரைப் பொறுத்தவரை, சில பயனர்கள் செயலியின் திட்டவட்டமான நடத்தைகளைக் கண்டறிந்து கேம்ஸ்கேனரைப் பதிவிறக்குவதைத் தடுக்கும் நோக்கத்துடன் பிளே ஸ்டோரில் ரிவியூக்களை வெளியிட்டனர்.
கேம்ஸ்கேனர் செயலியின்ன் சமீபத்திய பதிப்பில் காஸ்பர்ஸ்கி ஆராய்ச்சியாளர்கள் விளம்பரத் துளியைக் கண்டவுடன், அவர்கள் அந்த செயலி பற்றி புகாரளித்தனர். புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து பிளே ஸ்டோரிலிருந்து கேம்ஸ்கேனர் செயலி உடனடியாக அகற்றப்பட்டது. மேலும், கேம்ஸ்கேனருக்குப் பின்னால் உள்ள டெவலப்பர்கள் பயன்பாட்டின் சமீபத்திய பதிப்பு தொகுதியிலிருந்து விடுபட்டுள்ளனர் என்பதும் காணப்பட்டது. வெவ்வேறு ஸ்மார்ட்போன்களில் பயன்பாட்டின் வெவ்வேறு பதிப்புகளை இயக்குவதால், அவற்றில் சில பதிப்புகளின் ஆதார கோப்புகளில் தீங்கிழைக்கும் கோட்களை கொண்டிருக்கக்கூடும் என்பதால், பயன்பாட்டை உடனடியாக ஸ்மார்ட்போனிலிருந்து 'அன்-இன்ஸ்டால்' (Uninstall) செய்வதே நல்லது. கூகுள் ப்ளே ஸ்டோர் இந்த செயலியை சரிபார்த்து, மீண்டும் இந்த செயலி ப்ளே ஸ்டோரில் இடம்பெற்றபின் இந்த செயலியை பதிவிறக்கம் செய்வதே சரியானது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்