அதிக வாடிக்கையாளர் சலுகைகளுடன், அமேசான் ப்ரைம் போட்டியாக ப்ளிப்கார்ட் ப்ளஸ் அறிமுகம்

அதிக வாடிக்கையாளர் சலுகைகளுடன்,  அமேசான் ப்ரைம் போட்டியாக ப்ளிப்கார்ட் ப்ளஸ் அறிமுகம்
ஹைலைட்ஸ்
  • ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி ப்ளிப்கார்ட் ப்ளஸ் திட்டம் வெளியாக உள்ளது
  • ப்ளிப்கார்ட் ப்ளஸ் திட்டத்தில் இணைவதற்கு கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை
  • இலவச விரைவு டெலிவரி, சலுகைகள் இந்த திட்டத்தில் இடம் பெற்றுள்ளன
விளம்பரம்

ஆன்லைன் ஷாப்பிங் இணையத்தளமான ப்ளிப்கார்ட், புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அமேசான் ப்ரைம் திட்டத்திற்கு போட்டியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டம், ப்ளிப்கார்ட் ப்ளஸ் என்று பெயரில் வெளியாக உள்ளது.

வரும் ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி வெளியாகவுள்ள ப்ளிப்கார்ட் ப்ளஸ் வசதியில், இலவச விரைவு டெலிவரி, புதிய பொருட்களுக்கான சலுகைகள் போன்ற முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன

அமேசான் ப்ரைம், ப்ளிப்கார்ட் ப்ளஸ் ஆகிய இரண்டு திட்டங்களுக்கும் ஒரு வேறுபாடு உண்டு. அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்கள் மாத/வருட சந்தா செலுத்தி இந்த திட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், ப்ளிப்கார்ட் ப்ளஸ் திட்டத்தில், புள்ளி கணக்கில் ‘ப்ளஸ் காயின்ஸ்’ பெற்று, இந்த வசதிகளை பயன்படுத்தி கொள்ளலாம். இதன் மூலம் ப்ளிப்கார்ட் ப்ளஸ் திட்டத்தில் இணைவதற்கு வாடிக்கையாளர் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை

ப்ளிப்கார்ட்டில் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும், ரிவார்ட் பாயின்ட்ஸ் அளிக்கப்பட உள்ளது. இதன் மூலம், ப்ளிப்கார்ட் ப்ளஸ் வசதியினை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். குறிப்பாக, ப்ளிப்கார்ட்டின் சிறப்பு விற்பனை தினங்களில் இந்த திட்டம் பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்த தகவல்கள் ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி வெளியாகும் என்று ப்ளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது

ப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் தின விற்பனை, பிக் ஷாப்பிங் தின விற்பனை போன்ற சிறப்பு விற்பனை நாட்களில், சலுகைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ள இந்த திட்டம் பயன்படும். “வாடிக்கையாளர்களின் ஆன்லைன் ஷாப்பிங் அனுபவத்தை மேலும் சிறப்பாக்க, ப்ளிப்கார்ட் ப்ளஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2018 சுதந்தர தினத்தன்று இந்த திட்டம் வெளியிடப்படும்” என்று ப்ளிப்கார்ட் தலைமை நிர்வாகி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Flipkart, Flipkart Plus
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. iQOO Z10 Turbo, iQOO Z10 Turbo Pro செல்போனில் இத்தனை ரகசியம் இருக்காம்
  2. Huawei Band 9 வாட்ச் நீங்க நீச்சல் அடிச்சல் கூட இது கண்காணிக்குமாம்
  3. என்னங்க சொல்றீங்க 2 ஆண்டுகளுக்கு YouTube Premium தரும் ஜியோ
  4. சாம்சங் இப்படிப்பட்ட அம்சத்துடனா இந்த செல்போனை வெளியிடுது
  5. கொடுக்கும் காசுக்கு வொர்த்! Oppo Reno 13 5G, Reno 13 Pro 5G செல்போன்கள்
  6. POCO X7 5G செல்போன் ஆரம்பமே இப்படி அடித்து ஆடினால் எப்படிங்க
  7. கால் முடிகளை கொண்டு வாசனை நுகரும் சிலந்திகள்! புதிய தகவல்
  8. Amazon Great Republic Day sale 2025 இப்போ விட்டா ரொம்ப வருத்தப்படுவீங்க
  9. 10 ஆயிரம் ரூபாய் இருந்தால் 5G செல்போன் கிடைக்குமா? இதோ கிடைக்குமே!
  10. புலி வருது வருதுன்னு சொல்லி சொல்லி நிஜமாவே வந்துடுச்சு OnePlus 13R
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »