Realme GT 8 Pro ஸ்மார்ட்போன் நவம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் என கம்பெனி அறிவித்த நிலையில், இதன் சரியான வெளியீட்டு தேதி நவம்பர் 20 ஆக இருக்கலாம்
Photo Credit: Realme
Realme GT 8 Pro ஆனது Ricoh GR-டியூன் செய்யப்பட்ட பின்புற கேமரா யூனிட்டைக் கொண்டுள்ளது.
Realme பிராண்டோட அடுத்த ஃபிளாக்ஷிப் கில்லர், Realme GT 8 Pro பத்திதாங்க. Realme நிறுவனம், தங்களோட இந்த GT 8 Pro மாடல் நவம்பர் மாசம் இந்திய மார்க்கெட்டுக்கு வரும்னு அதிகாரபூர்வமா அறிவிச்சிட்டாங்க. ஆனா, துல்லியமா எந்த தேதின்னு சொல்லல. இந்த நிலையிலதான், நம்பத்தகுந்த டிப்ஸ்டர் ஒருத்தர், இந்த போனோட இந்திய வெளியீடு நவம்பர் 20-ஆம் தேதி நடக்கும்னு லீக் பண்ணியிருக்காரு. இந்த தேதி, மார்க்கெட்டில் போட்டி போடும் OnePlus 15 மற்றும் iQOO 15 வெளியீடுகளுக்கு நடுவுல வர்றது ரொம்பவே சுவாரஸ்யமா இருக்கு. இந்த போன் Flipkart மற்றும் Realme-யோட அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் விற்பனைக்கு வரும்னு உறுதிப்படுத்தப்பட்டிருக்கு.
இந்த போனின் பவர் எப்படின்னு பார்த்தீங்கன்னா, அதுக்கு உயிரே Qualcomm-ன் புதுசா வந்த Snapdragon 8 Elite Gen 5 சிப்செட்-தான். 3 நானோமீட்டர் டெக்னாலஜியில் உருவான இந்த ப்ராசஸர், போனோட பெர்ஃபார்மன்ஸை வேற லெவலுக்கு கொண்டுபோகும். இதோட சேர்த்து HyperVision AI chip-ம் இருக்கு. அப்போ கேமிங், AI அம்சங்கள் எல்லாம் அல்டிமேட்டா இருக்கும்னு சொல்லத்தேவை இல்லை. அதிகபட்சமா 16GB RAM மற்றும் 1TB ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் சீன மாடலில் இருக்கு. புகைப்படம் எடுப்பதில் Vivo-வைப் போலவே Realme-ம் இப்போ புதிய உயரத்தை தொட முயற்சி செய்துருக்கு. இந்த GT 8 Pro மாடலில் பிரபல கேமரா நிறுவனமான Ricoh GR-ஆல் டியூன் செய்யப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இருக்கு.
● பிரதான கேமரா 50MP, அல்ட்ராவைடு 50MP மற்றும் 200MP டெலிஃபோட்டோ லென்ஸும் இருக்கு.
● Ricoh GR-Mode மூலமா, டி.எஸ்.எல்.ஆர் (DSLR) கேமராவுக்கு இணையான குவாலிட்டியில், குறைவான Glare மற்றும் துல்லியமான Details-ஐ இந்த போன்ல நம்ம எதிர்பார்க்கலாம்.
● டிஸ்ப்ளே: இது 6.79-இன்ச் QHD+ ரெசல்யூஷன் கொண்ட AMOLED டிஸ்ப்ளே. இதுல 144Hz ரெஃப்ரெஷ் ரேட் இருக்கு. அது மட்டும் இல்லாம, இந்த டிஸ்ப்ளேயோட உச்சபட்ச பிரைட்னஸ் 7,000 நிட்ஸ் வரைக்கும் இருக்கும்னு சொல்லப்படுது. இது வெளிச்சத்திலும் ஸ்கிரீனை தெளிவா பார்க்க உதவும்.
● பேட்டரி: பெரிய 7,000mAh பேட்டரி மற்றும் 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் இருப்பது ஒரு பிளஸ் பாயிண்ட்.
இந்த போனின் சீன விலை சுமார் ₹50,000-ல் இருந்து தொடங்குது. இந்திய மார்க்கெட்டில் இந்த ஃபிளாக்ஷிப் போன் ₹55,000 முதல் ₹60,000 ரேஞ்சில் லான்ச் ஆகும்னு எதிர்பார்க்கலாம். நவம்பர் 20-ஆம் தேதி உண்மையிலேயே இந்த போன் லான்ச் ஆகுதான்னு காத்திருந்து பார்க்கலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999