Flipkart Republic Day Sale 2026-ஐ முன்னிட்டு Redmi Note 14 Pro Plus ஸ்மார்ட்போன் மிகப்பெரிய விலைக்குறைப்பைப் பெற்றுள்ளது.
Photo Credit: Redmi
Flipkart குடியரசு தின Redmi Note14 Pro Plus ₹25,000கீழ், வங்கி சலுகைகள் மற்றும் சிறப்பம்சங்கள்
"ஒரு மாஸான கேமரா, நீண்ட நேரம் தாங்குற பேட்டரி, கூடவே பாக்குறதுக்கு செம பிரீமியமா ஒரு போன் வேணும், ஆனா பட்ஜெட் கம்மியா இருக்கே"னு கவலைப்படுறீங்களா? இனி அந்த கவலை வேண்டாம்! ஏன்னா, பிளிப்கார்ட்டோட Republic Day Sale 2026 ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே, ரெட்மியோட டாப் மாடலான Redmi Note 14 Pro Plus விலையில ஒரு மரண மாஸ் சரிவு ஏற்பட்டிருக்கு.
அறிமுகமானப்போ ரூ.31,000 ரேஞ்சுல இருந்த இந்த போன், இப்போ முதல் முறையா ரூ.25,000-க்கும் கீழ இறங்கி வந்துருக்கு! "ரெட்மி நோட் சீரிஸ்ல இதான்ப்பா பெஸ்ட்"னு சொல்ற அளவுக்கு இந்த போன்ல என்னென்ன இருக்குன்னு பார்ப்போம். Redmi Note 14 Pro Plus (8GB RAM + 128GB) மாடலோட அறிமுக விலை ரூ.30,999. ஆனா பிளிப்கார்ட்ல இப்போ இதுக்கு ரூ.2,679 நேரடித் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு, ரூ.28,320-க்கு லிஸ்ட் ஆகியிருக்கு. இது மட்டுமில்லாம, உங்ககிட்ட SBI அல்லது Axis Bank கிரெடிட் கார்டு இருந்தா, அடிஷனலா ரூ.4,000 வரைக்கும் கேஷ்பேக் ஆஃபர் கிடைக்குது. இதெல்லாம் சேர்த்தா, இந்த பவர்ஃபுல் போன் வெறும் ரூ.24,320-க்கே உங்க கைக்கு வரும்.
6.67-இன்ச் 1.5K கர்வ்டு OLED டிஸ்ப்ளே இதுல இருக்கு. 120Hz ரிஃப்ரெஷ் ரேட் இருக்குறதால வீடியோஸ் பார்க்குறதும் சரி, பிரவுசிங் பண்றதும் சரி.. செம ஸ்மூத்தா இருக்கும். முக்கியமா இதுல 3,000 nits பீக் பிரைட்னஸ் இருக்குறதால, உச்சி வெயில்ல நின்னு போன் பார்த்தாலும் ஸ்கிரீன் அம்புட்டு தெளிவா தெரியும். பாதுகாப்பிற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Victus 2) வேற இருக்கு. இந்த போனோட மெயின் ஹைலைட்டே இதோட 200MP மெயின் கேமரா தான். கூடவே 50MP டெலிபோட்டோ மற்றும் 8MP அல்ட்ரா-வைட் கேமரா இருக்கு. DSLR லெவல்ல போட்டோஸ் எடுக்கணும்னு நினைக்கிறவங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். செல்பி எடுக்க 20MP பிரண்ட் கேமரா இருக்கு. நீங்க ஒரு வ்லாக் (Vlog) பண்ண போறீங்கனா, இந்த கேமரா செட்டப் உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்.
இதுல சாம்சங்கோட பிரம்மாண்டமான 6200mAh பேட்டரி இருக்கு. ஒரு தடவை சார்ஜ் போட்டா ரெண்டு நாள் தாராளமா வரும். அப்படியே சார்ஜ் தீர்ந்தாலும் கவலை இல்லை, ஏன்னா இதுல 90W அதிவேக சார்ஜிங் வசதி இருக்கு. பெர்ஃபார்மென்ஸ்க்கு Snapdragon 7s Gen 3 சிப்செட் இருக்குறதால, கேமிங் முதல் மல்டி-டாஸ்கிங் வரை எல்லாமே பக்கா-வா இருக்கும். இந்த விலைக்குறைப்பு ஒரு லிமிடெட் டைம் ஆஃபர் தான் மக்களே. ஜனவரி 17-ம் தேதி சேல் ஆரம்பிக்கும்போது இன்னும் டிமாண்ட் அதிகமாகும், அதனால இப்பவே முந்திக்கிறது நல்லது. ரூ.25,000 பட்ஜெட்ல ஒரு ஆல்-ரவுண்டர் போன் வேணும்னா, Redmi Note 14 Pro Plus தான் இப்போதைய பெஸ்ட் சாய்ஸ். இந்த ஆஃபர் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? ₹24,320-க்கு இது ஒர்த்-தா? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
NASA Says the Year 2025 Almost Became Earth's Hottest Recorded Year Ever
Civilization VII Coming to iPhone, iPad as Part of Apple Arcade in February