வெளியாகும் சியோமி எம்.ஐ பிளே : அதை பற்றிய தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து தகவல்கள்
Photo Credit: சியோமி
புதிய சியோமி எம்.ஐயின் விலை விபரங்கள் இன்னும் அறியப்படவில்லை
சியோமி எம்.ஐ பிளே, சீனாவில் இன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன் மாடல்கள் மற்றும் சிறப்பு தோற்றங்கள் குறித்து பல செய்திகள் இதற்கு முன்னர் வந்த நிலையில். சியோமியின் இந்த புதிய தயாரிப்பு எவ்வித மாற்றங்களுடன் வாடிக்கையாளர்களை கவரும் என பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.
சியோமியின் எம்.ஐ. பிளோ பொறுத்தவரை, இரட்டை டிஸ்பிளே, இரண்டு பின்புற கேமராக்கள் இருக்கும் என எதிர்பாக்கப்படுகிறது. மேலும் வந்த தகவல்கள் படி 5.84 இஞ்ச் ஃபுல் ஹெச்.டி ஸ்கிரின், 3 ஜிபி/4ஜிபி/6ஜிபி என மூன்று வகையான ரேம் வகைகளில் விற்கப்படவுள்ளது. 2,900 mAh பேட்டரி பவரை கொண்டுள்ளது. இத்துடன் 12 மெகா பிக்சல் கேமரா வசதியுடன் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சியோமி நிறுவனம் சார்பாக கசிந்த தகவல்கள் படி வருடம் முழுவதும் மாதந்தோறும் 10 ஜிபி டேட்டா வரை இலவசமாக தரவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. விரிவு செய்துகொள்ள வசதியாக நினைவகம், ஆக்டா-கோர் சிப் ப்ராசஸர்களுடன் விற்பனைக்குள் அனைத்து போன்களைபோலவே அடிப்படை வசதிகளை கொண்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Wobble Announces Launch Date for First Smartphone in India: Expected Specifications, Features