இந்த ஆண்டின் தொடக்கத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது எம்.எஸ்.என் செய்தி செயலியை, மைக்ரோசாப்ட் நியூஸ் செயலிலையை புதிதாக மாற்றி அண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் மென்பொருட்களில் பயன்படும்விதமாக வெளியிட்டது. இந்த புதிய செய்திதரும் செயலி, 28 மொழிகளில் பயன்படுத்த முடியும் என்றும் பல தலைப்புகளை பற்றி புதிய தகவல்களை வாடிகையாளர்களிடம் சேர்ப்பதால், இந்த செயலியின் மூலம் செய்தி வாசிப்பு மக்களிடையே அதிகரிக்கும் என கருதப்படுகிறது.
ஹம்மிங் ப்பேர்டு என்றழைக்கப்படும் இச்செயலியில், பயனர்கள் தங்களுக்கு விருப்பமான செய்திகளை பார்க்கமுடியும் மேலும் எல்லாதுறையிலும் உள்ள உடனுக்குடன் விபரங்களை தானாகவே வாடிக்கையாளர்க்கு மூன் காட்டும்.
அமெரிக்காவில் மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடிகிற ஹம்மிங்போர்டு செயலி, அண்ட்ராய்டில் மட்டுமே கிடைக்கிறது.
மேலும் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) முறையில் பயனாளர்களின் விருப்பத்தை அறிந்துகொண்டு, தொழிநுட்பம், விளையாட்டு, அரசியல், வணிகம் போன்ற அனைத்து செய்திகளின் கலவையாக செய்தி வரிசையை அமைக்கும்.
மேலும் பயன்பாட்டாளர்களால் அதை லைக் மற்றும் டிஸ்லைக் செய்யவும் முடியும். மேலும் இத்தகவல்களை நண்பர்களிடம் சமூக ஊடகங்களில் பகிரவும் முடிகிறது.
பயனாளியின் விருப்பத்திற்க்கு ஏற்றவாறு (+) என்னும் பட்டனை அழுத்தினால் தனக்கு விருப்பமான தலைப்பு மற்றும் துறைகளை தேர்வு செய்ய முடியும். முக்கிய வாக்கியங்களை கொண்டு தேடுதல் நடத்தி விருப்பமான செய்திகளை படிக்கவும் நேரிடலாம்.
மேல் குறிப்பிட்டதுபோல் அமெரிக்காவில் மட்டுமே தற்போதைக்கு பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யப்படும் என்ற நிலையில் ஏ.பி.கே மிரர் என்னும் செயலி மூலம் மற்ற நாடுகளில் உள்ளவர்களும் பதிவிறக்கம் செய்யமுடியும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்