இந்தியாவில் எம்ஐ ரோபோ வேக்யூம்-மோப் பி ரோபோடிக் வேக்யூம் கிளீனரை, Xiaomi அறிமுகப்படுத்தியுள்ளது. இது டூ-இன்-ஒன் ஸ்வீப்பிங் மற்றும் மோப்பிங் செயல்பாட்டுடன் வருகிறது. இதில், வழிசெலுத்தலுக்கான லேசர் கண்டறிதல் அமைப்பு (எல்.டி.எஸ்) உள்ளது. எம்ஐ ரோபோ வேக்யூம்-மோப் பி, 12 உயர் துல்லிய சென்சார்களைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் எம்ஐ ரோபோ வேக்யூம்-மோப் பி-யின் விலை ரூ.29,999. இருப்பினும், அறிமுக விலையாக ரூ.17,999-க்கு தற்போது கிடைக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு மாதம் ரூ.2,999-க்கு no-cost EMI ஆப்ஷனும் கிடைக்கும். இதை, க்ரூட்ஃபண்டிங் இயங்குதளத்தின் மூலம் ஆர்டர் செய்யலாம்.
எம்ஐ ரோபோ வேக்யூம்-மோப் பி, தூரிகை இல்லாத மோட்டருடன் 2,100Pa உறிஞ்சும் சக்தியைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் எட்டு மீட்டர் ஸ்கேனிங் வரம்பையும், ஒரு வினாடிக்கு 2,016 மடங்கு மாதிரி விகிதத்தையும் கொண்டுள்ளது. இதில் ஸ்வீப்பிங் + மோப்பிங் மோட் உள்ளது. தரையை உலர சுத்தம் செய்வதற்கு Sweeping Only மோட் உள்ளது. இதில் மின்னணு முறையில் கட்டுப்படுத்தப்பட்ட நீர் தொட்டியை உள்ளது. இது மூன்று கியர்கள் நீர் விநியோக முறைகள் மற்றும் நீர் அடைப்பு தடுப்பு இயந்திரநுட்பத்தைக் கொண்டுள்ளது.
இந்த வேக்யூம் கிளீனர், உங்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி எம்ஐ ஹோம் செயலி மூலம் இணைக்கலாம். இதன் மூலம் தொலைதூரத்திலும் கூட எளிமையாக சுத்தம் செய்யலாம். இந்த சாதனத்தை முதல் முறை இயக்கியவுடனேயே, செயலி மூலம் navigates, identifies அறையின் இருப்பிடம் ஆகியவற்றை சேமித்து வைக்கிறது. தரைவிரிப்புகள் அல்லது சலவை அறைகள் போன்ற பகுதிகளை சுத்தம் செய்வதைத் தவிர்க்க, செயலியை பயன்படுத்தி மெய்நிகர் சுவர்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பகுதிகள் உருவாக்கலாம்.
எம்ஐ ரோபோ வேக்யூம்-மோப் பி, குவாட் கோர் கோர்டெக்ஸ்-ஏ 7 சிபியுவைக் கொண்டுள்ளது. இது டூயல் கோர் மாலி 400 ஜி.பீ.யுடன் இயக்கும். இது ஒரு தானியங்கி ரீசார்ஜ் மற்றும் மறுதொடக்கம் அம்சத்தையும் கொண்டுள்ளது. இதன் வன்பொருள் அதன் சார்ஜிங் புள்ளிக்குச் சென்று தானாக ரீசார்ஜ் செய்ய உதவுவதோடு, பிரேக் பாயிண்டிலிருந்து மீண்டும் சுத்தம் செய்ய தொடங்குகிறது. இது 3,200 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 2 மணி நேரம் வரை இயங்கும். சாதனம் இணைப்பு முன்பக்கத்தில் Wi-Fi 802.11 b/g/n மற்றும் நிலையான மோடில் 70 டிபி வரை சத்தத்தை உருவாக்குகிறது. இது, 350x94.5 மிமீ அளவு மற்றும் 3.6 கிலோகிராம் எடை கொண்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்