இதன் மூலம் இனி நெட்ஃபிலிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் டிஸ்னி+ என அனைத்தையும் ஒரே க்ளிக்கில் பார்க்க முடியும்.
ஜியோ டிவி பிளஸ் 12 OTT தளங்களையும் ஒரே க்ளிக்கில் வழங்கியதே பெரும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
ஜியோ டிவி பிளஸ் தற்போது ஒரே கணக்கில் 12 OTT தளங்களுக்கான சேவையை அறிவித்துள்ளது. இதன் மூலம் இனி நெட்ஃபிலிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் டிஸ்னி+ என அனைத்தையும் ஒரே க்ளிக்கில் பார்க்க முடியும்.
கடந்த புதனன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திரக்கூட்டம் நடைபெற்றது. அப்போது ஜியா டிவி பிளஸ் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, புழக்கத்தில் உள்ள பெரும்பாலான ஓடிடி தளங்களை ஜியோ டிவி பிளஸ் ஒருங்கிணைத்து வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
அதாவது இதுவரையில் பிரைம் வீடியோ, நெட்ஃபிலிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களைப் பார்க்க வேண்டுமென்றால், அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பெயர், பாஸ்வேர்டு கணக்கு வைத்திருக்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு தளத்திற்கும் தனித்தனியாக பதிவு செய்ய வேண்டியதிருக்கும். ஆனால், தற்போது ஜியோ டிவி பிளஸ் அறிவித்துள்ள அட்டகாசமான திட்டத்தின்படி, இனி ஓடிடி தளங்கள் அனைத்திற்கும் ஒரே கணக்கு வைத்து பார்க்க முடியும். ஊரடங்கு காலத்தில் அனைவரும் வீட்டிற்குள் இருக்கும் இந்நிலையில், ஜியோவின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தியுள்ளது.
என்னென்ன OTT தளங்கள் கிடைக்கும்?
ஜியோ டிவி+ அறிவிப்பின்படி மொத்தம் 12 OTT தளங்களை ஒரே கணக்கில் லாக்-இன் செய்ய முடியும். அவை: நெட்ஃபிலிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், வூட், சோனி லைவ், ஜீ5, லைனஸ்கேட், ஜியோ சினிமா, ஷெமரூ, ஜியோ சாவன், யூடியூப், ஈரோஸ் நவ்.
மேலும், வாய்ஸ் செர்ச் எனப்படும் குரல் வழித் தேடல் வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்தத் தளம் பார்க்க வேண்டும், எந்தப் படம் பார்க்க வேண்டும், எந்த சீரியல் பார்க்க வேண்டும் போன்றவற்றை சொன்னாலே போதும், வாய்ஸ் செர்ச் வசதியின் மூலம் அடுத்த நொடி கிடைத்துவிடும். குறிப்பாக நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், கதைக்கரு, தயாரிப்பாளர் என எதன் அடிப்படையிலான படம் வேண்டுமோ அதையும் வாய்ஸ் செர்ச் மூலம் கண்டுபிடிக்கலாம்.
![]()
இதுவரையில் இல்லாத முக்கிய அம்சம்:
ஜியோ டிவி பிளஸ் 12 OTT தளங்களையும் ஒரே க்ளிக்கில் வழங்கியதே பெரும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், இதை விட மற்றொரு தனிச்சிறப்பும் உள்ளது. அதாவது நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, மற்ற பயனாளர்களுடனும் தொடர்பு கொள்ளலாம். உதாரணத்திற்கு ஒரு சீரியலைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அது பிடித்திருக்கிறதா இல்லையா என வாக்களிக்கலாம். அந்த குறிப்பிட்ட நேரத்தில் அதே சீரியலை இந்தியாவிற்குள்ளாக வேறு இடத்தில் இருந்து பார்க்கும் மற்றொரு பயனாளியும் அதற்கு வாக்களிக்கலாம். இவ்வாறு ஒரே சமயத்தில் பார்வையாளர்களின் கருத்துக்கள் பகிரப்படுகிறது.
மேலும், ரிலையன்ஸ் வருடாந்திர கூட்டத்தில், நிறுவன அதிபர் அம்பானி, ஜியோ டெவலப்பர் திட்டத்தில் இணையும்படி ஆப் டெவலப்பர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதன் மூலம் ஜியோ ஆப் ஸ்டோர் உதவியோடு, ஒரு ஆப்பை உருவாக்கி, அதன் மூலம் சம்பாதிக்கவும் முடியும்.
Can Netflix force Bollywood to reinvent itself? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
The Offering Is Streaming Now: Know Where to Watch the Supernatural Horror Online
Lazarus Is Now Streaming on Prime Video: Know All About Harlan Coben's Horror Thriller Series