பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) வியாழக்கிழமை தனது தற்போதைய மற்றும் புதிய பயனர்களுக்கு திட்டங்களை வழங்குவதற்கான பண்டிகை சலுகையை அறிவித்தது. புதிய சலுகை ரூ .1,699 உடன் ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 455 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதேபோல், ரூ. 106 மற்றும் ரூ. 107 ப்ரீபெய்ட் திட்டங்கள் அதன் புதிய வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்று state-run operator அறிவித்திருந்தனர். அதேபோன்று, ரூ. 186 மற்றும் ரூ. 187 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களுக்கு கூடுதல் டேட்டாவை வழக்கவுள்ளது. இந்த பண்டிகை காலங்களில் இயங்கும் புதிய சலுகையுடன் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற நிறுவனங்களுக்கு எதிராக போட்டியிட டெல்கோ இலக்கு வைத்துள்ளது.
அக்டோபர் 31 வரை, பி.எஸ்.என்.எல் அதன் ரூ. 1,699 ப்ரீபெய்ட் திட்டம் 455 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் முதலில் 365 நாட்கள் செல்லுபடியை வழங்கியது. இருப்பினும் அதன் செல்லுபடியாகும் தன்மை ஆகஸ்ட் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு 455 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
ரூ. 1,699 பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம், 2 ஜிபி தினசரி டேட்டா, unlimited voice மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் செய்திகளை வழங்குகிறது.
பி.எஸ்.என்.எல் ரூ. 106 மற்றும் ரூ. 107 ப்ரீபெய்ட் திட்டத்தில், புதிய வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் 24 நாட்களுக்கு unlimited voice calling-ஐ சலுகைகளுடன் வழங்குகிறது. ரூ. 186 மற்றும் ரூ. 187 ப்ரீபெய்ட் திட்டங்கள் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் unlimited voice மற்றும் 28 நாட்களுக்கு 100 எஸ்எம்எஸ் செய்திகளை வழங்க மேம்படுத்தப்பட்டுள்ளன.
புதிய சலுகைகள் ரூ. 186 மற்றும் ரூ. 187 ப்ரீபெய்ட் திட்டங்கள் சமீபத்தில் பிஎஸ்என்எல் ஹரியானா தளத்தில் காணப்பட்டன. அந்த தளத்தில், முதன் முறை பிஎஸ்என்எல் பயனர்களுக்கு ரூ. 106 மற்றும் ரூ.107 ஆகிய திட்டங்களும் காண்பிக்கப்பட்டன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்