Xiaomi-யின் Mi Watch Color-ன் விவரங்கள் கசிந்தன...!

Mi Watch Color-ன் சில்லறை தொகுப்பின் கசிந்த படங்கள் 5ATM நீர் எதிர்ப்பையும் வெளிப்படுத்துகின்றன.

Xiaomi-யின் Mi Watch Color-ன் விவரங்கள் கசிந்தன...!

Photo Credit: Weibo

Xiaomi Mi Watch Color-ன் பேட்டரி ஒரே சார்ஜில் 14 நாட்கள் நீடிக்கும் என்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

ஹைலைட்ஸ்
  • Xiaomi Mi Watch Color, 10 விளையாட்டு முறைகளை வழங்கும்
  • ithu 1.39-inch (454 x 454 pixels) AMOLED டிஸ்பிளேவை பேக் செய்யும்
  • Xiaomi Mi Watch Color, Bluetooth 5.0 BLE & NFC ஆதரவை வழங்கும்
விளம்பரம்

Xiaomi, இந்த வார தொடக்கத்தில் Mi Watch Color-ஐ அறிவித்தது. ஆனால் இதுவரை நிறுவனம் தனது சமீபத்திய ஸ்மார்ட்வாட்சின் வன்பொருளை வெளியிடவில்லை. இருப்பினும், Mi Watch Color-ன் சில்லறை தொகுப்பின் சில நேரடி படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளன. மேலும் அவை டிஸ்பிளே அளவு மற்றும் தெளிவுத்திறன், பேட்டரி திறன் மற்றும் இணைப்பு அம்சங்கள் போன்ற சில முக்கிய விவரக்குறிப்புகளை வெளிப்படுத்துகின்றன. 

Mi Watch Color-ன் சில்லறை தொகுப்பின் கசிந்த படங்களுடன் தொடங்கி, தொகுப்பில் அச்சிடப்பட்ட தயாரிப்பு விவரங்கள் 454 x 454 pixels தெளிவுதிறன் கொண்ட 1.39-inch AMOLED டிஸ்ப்ளேவை வெளிப்படுத்துகின்றன. XMWT06 என்ற மாடல் எண்ணைக் கொண்டிருக்கும் Mi Watch Color, GPS, Glonass மற்றும் NFC உடன் Bluetooth 5.0 BLE தரத்தை ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆண்ட்ராய்டு 4.4 KitKat அல்லது அதிக பதிப்பில் இயங்கும் போன்களுடன் இணக்கமாக இருக்கும்.

Xiaomi Mi Watch Color-ன் பேட்டரி திறன் 420mAh என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதிகாரப்பூர்வ Mijia Weibo சேனலின் ஒரு பதிவின் படி, இது ஒரே சார்ஜில் 14 நாட்கள் வரை நீடிக்கும். Mi Watch Color-ன் சில்லறை தொகுப்பின் கசிந்த படங்கள் 5ATM நீர் எதிர்ப்பையும் வெளிப்படுத்துகின்றன. அதாவது வாட்ச் 50 மீட்டர் ஆழம் வரை 10 நிமிடங்களுக்கு நீரில் செயல்பட முடியும். கூடுதலாக, இதய துடிப்பு (heart rate) மற்றும் நீச்சல் கண்காணிப்பு (swim-tracking) அம்சங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும், உடற்பயிற்சி கண்காணிப்புக்காக Mi Watch Color-வில் 10 தொழில்முறை விளையாட்டு முறைகளுடன் முன்பே ஏற்றப்படும் என்பதையும், அவை தனிப்பயன் விளையாட்டு வழிமுறைகளை நம்பியிருக்கும் என்பதையும் ஜியோமி உறுதிப்படுத்தியுள்ளது. பல வண்ணங்கள் மற்றும் பொருள் தேர்வுகளில் பட்டைகள் வழங்குவதைத் தவிர, Mi Watch Color தனிப்பயனாக்கத்திற்கான வாட்ச் முகங்களின் பரந்த பட்டியலுடன் வரும். ஸ்மார்ட்வாட்ச் தொடர்பான கூடுதல் விவரங்கள் சீனாவில் ஜனவரி 3-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் நாட்களில் வெளிப்படும்.

Xiaomi Mi Watch Color With Heart Rate Tracking, Sleep Monitoring Capabilities Launched

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. மொபைல்ல இல்ல, காருக்குள்ள ரே-டிரேசிங்! Dimensity P1 Ultra சிப்செட் – காருக்கான AI சக்தியை கொண்டுவந்த MediaTek
  2. 200MP, 7000mAh பேட்டரி... இனி சார்ஜ் பண்ற கவலையே இல்லை! Realme 16 Pro-வோட மிரட்டலான ஸ்பெக்ஸ் லீக்
  3. Phone 3 யூசர்களுக்கு தீபாவளி ட்ரீட்! Nothing OS 4.0 ஸ்டேபிள் அப்டேட் ரிலீஸ்—கிட்டத்தட்ட 8 புது வசதிகள்
  4. 8000mAh பேட்டரி கொண்ட OnePlus போனா? Ace 6T மாடலின் அசத்தல் வண்ணங்கள் ரிலீஸுக்கு முன்னாடியே வெளியீடு
  5. Oppo K15 Turbo Pro: Snapdragon 8 Gen 5, 8000mAh பேட்டரி லீக்.
  6. ஸ்மார்ட் வாட்ச் வாங்க போறீங்களா? OnePlus-ன் 'New Watch' டீஸர்! 5800 ரூபாய் டிஸ்கவுன்ட்
  7. iQOO 15: Pre-Booking இன்று துவக்கம்; 7000mAh Battery உடன் நவம்பர் 26 அறிமுகம்
  8. இந்தியாவின் புது கிங்! Lava Agni 4 லான்ச்! ₹22,999-க்கு இந்த போனை வாங்கலாமா?
  9. Wobble One: Dimensity 7400, 120Hz AMOLED Display உடன் ரூ.22,000-க்கு அறிமுகம்
  10. Vivo-ன் போட்டோகிராபி கிங்! X300 Pro-க்கு ₹1,09,999 விலையா? விலை ஏறுனதுக்கு என்ன காரணம்?
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »