Xiaomi நிறுவனம் தனது அடுத்த மாஸ் தயாரிப்பான Watch 5-ஐ இந்த வாரம் களம் இறக்குகிறது
Photo Credit: Xiaomi
Xiaomi 17 Ultra டிசம்பர் 25 அன்று வெளியிடப்படும், மேலும் அதனுடன் Xiaomi Watch 5-ம் இணைக்கப்படும்.
இன்னைக்கு நம்ம டெக் உலகத்துல ஒரு தரமான அப்டேட் வந்திருக்கு. ஸ்மார்ட்வாட்ச்னாலே ஆப்பிள், சாம்சங்னு யோசிச்ச காலம் போயி, இப்போ Xiaomi "நானும் களத்துல இறங்குறேன்"னு செம்ம மாஸா வர்றாங்க. ஆமாங்க, இந்த வாரம் Xiaomi Watch 5 மார்க்கெட்டுக்கு வருது. முதல்ல இதோட இதயத்தை பத்தி பேசிடுவோம். இதுல 'Snapdragon W5 SoC' சிப்செட் இருக்கு. சிம்பிளா சொல்லணும்னா, வாட்ச் ஹேங் ஆகாம, மொபைல் லெவலுக்கு மின்னல் வேகத்துல வேலை செய்யும். ஆப்ஸ் ஓபன் பண்றதா இருக்கட்டும், நோட்டிபிகேஷன் செக் பண்றதா இருக்கட்டும்... வேற லெவல் ஸ்மூத்தா இருக்கும்.
இந்த வாட்ச்ல இருக்குற 'The Real Game Changer' இந்த EMG (Electromyography) சென்சார்தான். இதுவரைக்கும் ஸ்மார்ட்வாட்ச்ல ஹார்ட் ரேட், ஆக்சிஜன் லெவல் பார்த்திருப்பீங்க. ஆனா இந்த EMG சென்சார், உங்க தசைகளோட (Muscles) செயல்பாட்டை மின் துடிப்பு மூலமா கணக்கிடும். நீங்க ஜிம்முக்கு போறவரா இருந்தா, உங்க மசில்ஸ் எவ்வளவு ஸ்ட்ரெயின் ஆகுது, உடற்பயிற்சி சரியா பண்றீங்களான்னு இது புட்டு புட்டு வச்சிடும். மெடிக்கல் லெவல் டெக்னாலஜியை கையில் கட்டிக்கிற வாட்ச்ல கொண்டு வர்றது சும்மா சாதாரண விஷயம் இல்ல பாஸ்!
பார்க்குறதுக்கே ரொம்ப பிரீமியமா, ரவுண்ட் டயல் டிசைன்ல செம்ம ஸ்டைலா இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது. இதுல இருக்குற பேட்டரி லைஃப் மத்த வாட்சுகளை விட அதிகமா இருக்கும்னு சொல்றாங்க. ஏன்னா, Snapdragon W5 சிப் பவரை ரொம்ப கம்மியா தான் இழுக்கும்.
இந்த வாரம் கடைசியில இதோட அனௌன்ஸ்மென்ட் வந்துடும். பட்ஜெட் பத்திக் கவலைப்படாம, ஒரு தரமான, புதுவிதமான சென்சார் இருக்குற வாட்ச் வேணும்னு நினைக்கிறவங்களுக்கு இது ஒரு செம்ம ஆப்ஷன். மொத்தத்துல Xiaomi Watch 5, ஸ்மார்ட்வாட்ச் மார்க்கெட்ல ஒரு பெரிய ஸ்கெட்ச் போட்டுட்டு தான் வருது. நீங்க இந்த வாட்சுக்காக வெயிட் பண்றீங்களா? EMG சென்சார் உங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்குமா? கமெண்ட்ல சொல்லுங்க.பார்க்குறதுக்கே ரொம்ப பிரீமியமா, ரவுண்ட் டயல் டிசைன்ல செம்ம ஸ்டைலா இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Magnetic Control of Lithium Enables Safer, High-Capacity “Dream Battery” Without Explosion Risk