மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜியோமி நிறுவனத்தின் புதிய டிவி, பேண்டு உள்ளிட்டவை பெங்களூருவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. ஜியோமி நிறுவனம் ஏற்கனவே Mi என்ற பெயரில் 2 பேண்டுகளை வெளியிட்டிருந்தது. அந்த வரிசையில் தற்போது 3-வது Wrist Band-ஐ வெளியிட்டுள்ளது. இதன் பேட்டரி சக்தி 110 ஆம்பியர். ஒரு முறை சார்ஜ் செய்தால் 20 நாட்கள் வரை தாங்கும் திறன் கொண்டது. 0.78 இன்ச் அளவு கொண்ட OLED ஸ்க்ரீன், வாட்ஸப் மெசேஜ்களை பார்க்கும் வசதி, வானிலை அறிவிப்பு உள்ளிட்ட வசதிகள் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதேபோன்று போனை கட் செய்யும் வசதியும் இதில் உள்ளது. ஆரஞ்சு, நீலம், கருப்பு என மூன்று வண்ணங்களில் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 50 மீட்டர் ஆழம் வரை தண்ணீர் உள்ளே செல்லாத திறன், இதய துடிப்பின் அளவு, நடக்கும் அடிகளின் கணக்கெடுப்பு, தூங்கும் நேரம் உள்ளிட்டவற்றை இதில் காண முடியும். நாளை மதியம் 12 மணி முதல் Amazon.in மற்றும் Mi.com வழியே இதனை வாங்க முடியும்.
ஜியோமி ஏர் ப்யூரிஃபையர் 25 என்பது இன்னொரு முக்கிய அறிமுகம் ஆகும். ஸ்மார்ட் டிஸ்ப்ளே, ப்ரட்னஸ் அட்ஜெஸ்ட்மென்ட், 0.3 மைக்ரான் வரை சென்சார் செய்யும் திறன், 226-398 சதுர அடி வரையிலான பகுதியை தூய்மைப்படுத்தும் திறன் உள்ளிட்ட அம்சங்கள் இதில் உள்ளன. இதன் விலை ரூ. 8,999-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Mi TV என்பது ஜியோமி அறிமுகப்படுத்தும் இன்னொரு ப்ராடெக்ட். 32, 49, மற்றும் 55 இன்ச் டிஸ்ப்ளே என 3 வகையான டி.வி.-க்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்