5 இன் 1 யுனி தொழில்நுட்பம் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஸ்மார்ட் காலணிகள், 5 பல்வேறு விதமான பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 2,499 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் எம்ஐ காலணிகள்!
சீனாவின் முக்கிய நிறுவனங்களில் ஓன்றான சியோமி, இந்தியாவில் தனது புதிதாக வடிவமைக்கப்பட்ட காலணிகளை விற்பனை செய்ய முடிவெடுத்தது. அதன் பற்றிய தகவல்களை அறிக்கையாக வெளியிட்டு சில தினங்களே ஆன நிலையில், தனது எம்.ஐ மென்ஸ் ஷூஸ்யை அறிமுகம் செய்துள்ளது.
ஆண்களுக்கான இந்த எம்.ஐ மென்ஸ் ஸ்போர்ட்ஸ் ஷூ 2, 5 இன் 1 யுனி மோல்டிங் டெக்னாலஜியை கொண்டு தயாரிக்கப்படுகிறது. வெளிபுறம் சிந்தட்டிக்காலும், வேக்ம் அழுத்தம் கொண்ட மிட்சோல், குஷின் பேட்ச் மற்றும் பியு லேயரை கொண்ட இந்த ஹைடெக் காலணி அதிர்ச்சியை தாங்கும் சக்தியுடனும், நீண்டநாள் உறுதியாகவும் வழுக்காமலும் இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் சியோமி காலணிகளில் இருக்கும் 10 விஷ்போன் அமைப்பு கால்களை வசதியாக வைத்து கொள்ள உதவுகிறது. இந்த தொழிநுட்பத்தால் அடிபடுவதற்கு குறைவான வாய்ப்புகளே உள்ள நிலையில் சுழுக்கு போன்ற சதை பிடிப்புகளையும் இந்த காலணி தவிர்க்கும். மேலும் சியோமி நிறுவனம் சார்பாக வெளியான தகவல் படி காற்று புகக்கூடிய தன்மையை கொண்டது அதனால் இந்த காலணிகளை வாஷிங் மிஷின்களில் போட்டு துவைக்கவும் எளிமையாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
சில காலத்திற்கு முன்னரே தனது புதிய டிவி தயாரிப்பையும், மைக்ரோ பிரேய்ட் கேபிள்கள் ஆகியவற்றை தயாரித்த நிலையில் இந்த புதிய தயாரிப்பை இந்திய வாடிக்கையாளர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும். சியோமியின் இணையதளத்தில் இந்த புதிய தயாரிப்பு ஏற்கனவே முதற்கட்ட சேலாக ரூபாய் 2,499 க்கு வெளியாகியுள்ள நிலையில் அவைகள் கருப்பு, க்ரே மற்றும் நீல நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர்.
தற்போது ஆர்டர் செய்யப்படும் காலணிகள் மார்ச் மாதம் 15 ஆம் தேதி ஷூப்பிங் செய்யப்படும். இந்த சேலுக்கு பின்னர் தனது ஓரிஜினல் விலையான ரூபாய் 2,999 க்கு விற்பனை செய்யப்படும். இன்னும் 10 நாட்கள் இந்த சேல் தொடரும் என்ற நிலையில் சுமார் 5,000 யுனிட் காலணிகளை விற்பனை செய்ய சியோமி நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
மேலும் இந்த காலணிகளை பற்றி பேசிய சியோமி நிறுவனத்தின் (கடெகிரி மற்றும் ஆன்லைன் சேல்ஸ்) தலைவர் ரகு ரெட்டி ‘இந்த 2019 ஆம் ஆண்டை இரண்டு புதிய தயாரிப்புகளுடன் தொடங்கியுள்ளோம். இந்த மகிழ்ச்சிகரமான சமையத்தில் எம்ஐ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ஆண்களுக்கான விளையாட்டுகளுக்காகவே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட காலணிகள் வெளியிடுவது சந்தோஷமாக உள்ளது. மேலும் இந்த புதிய காலணிகள் அசத்தும் டிசையின் மற்றும் சிறந்த விலையை கொண்டுள்ளதால் எம்ஐ வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளதாக' தெரிவித்தார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
CMF Headphone Pro India Launch Date Announced: Expected Features, Specifications
Sony's New Hyperpop Collection of PS5 Console Covers, DualSense Controllers Launches March