சையோமியின் மை பேண்டு 3, ஏர்- ப்யூரிஃபையர் 2 எஸ் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது
சையோமி மை பேண்டின் 3யின் விலை 1,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது
முன்னனி நிறுவனமான சையோமியின் மை பேண்டு 3, ஏர்- ப்யூரிஃபையர் 2 எஸ் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இன்று மதியம் 12 மணி முதல் அமேசான், மை.காம் ஆகிய இணையதளங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.
சையோமி மை பேண்டின் 3யின் விலை 1,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 0.78 இன்ச் டிஸ்ப்ளே, 128x80 பிக்சல், 0.43 இன்ச் பேனல் ஆகியவை கொண்டுள்ளது. 110mAh லித்தியம் பேட்டரி இடம் பெற்றுள்ளது. மேலும், ப்ளூடூத் v4.2 LE சப்போர்ட் கொண்டுள்ளது.
ஆண்டுராய்டு 4.4 அல்லது அதற்கு மேற்பட்ட வெர்ஷன்களில் மை பேண்டு 3 பயன்படுத்தலாம். ஐபோன்களை பொறுத்தவரை iOS 9.0 அல்லது மேற்பட்ட வெர்ஷனில் பொருந்தும்.
சையோமி மை ஏர் ப்யூரிஃபையர் 2 எஸ் விலை 8,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Centre Notifies DPDP Rules 2025, RTI Amendment 2025 Comes Into Force