ஜியோமி ஆதரவுடன் செயல்பட்டுவரும் ஹுவாமி இந்திய சந்தையில் தனது உற்பத்திப் பொருட்களை விரிவு செய்து வருகிறது
அமேஸ்ஃபிட் பேஸ் மற்றும் அமேஸ்ஃபிட் கோர் ஆகியவை அமேசான் இந்தியா ஆன்லைனில் கிடைக்கின்றன.
ஜியோமி ஆதரவுடன் செயல்பட்டுவரும் ஹுவாமி இந்திய சந்தையில் தனது உற்பத்திப் பொருட்களை விரிவு செய்து வருகிறது. தற்போது இந்த நிறுவனத்தின் சார்பில் அமேஸ்ஃபிட் பேஸ் மற்றும் அமேஸ்ஃபிட் கோர் ஆகிய 2 ஸ்மார்ட் வாட்சுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. வட்ட வடிவ டயல், கருப்பு மற்றும் சிவப்பு என 2 வண்ண ஸ்ட்ராப்புகளில் இவை கிடைக்கும். அமேஸ்ஃபிட் கோர் பிட்னஸ் பேண்டில் 1.23 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. இந்த இரு ஸ்மார்ட் வாட்சும் அமேசான் இந்தியா ஆன்லைனில் கிடைக்கும்.
அமேஸ்ஃபிட்டின் விலை ரூ. 9,999 ஆகவும், அமேஸ்ஃபிட் கோரின் விலை ரூ. 3,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 10 சதவீத கேஷ் ஆஃபர் முதல் ரூ. 100 வரை விசா டெபிட், கிரடிட் அல்லது ஏடிஎம் கார்டுகளில் சலுகை வழங்கப்படுகிறது. பீம் யுபிஐ அல்லது ரூபே கார்டுகளில் 10 சதவீதம் முதல் ரூ. 50 வரை சலுகை வழங்கப்படுகிறது.
அமேஸ்ஃபிட்டில் 2.4 ஜி.பி. வரை இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. ஜி.பி.எஸ்., ஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார், தூரம், நேரம், வேகம், கலோரி, எலிவேஷன், தூங்கும் நேரம் உள்ளிட்டவற்றை கணக்கீடு செய்யும் வசதிகள் இந்த ஸ்மார்ட் வாட்சில் உள்ளன.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 11 நாட்களுக்கு சார்ஜ் நிற்கும். இதன்படி 36 மணி நேரத்திற்கு ஜி.பி.எஸ்.ஐ தொடர்ச்சியாக பயன்படுத்த முடியும்.
இன்கம் காலுக்கு நோடிஃபிகேஷன், எஸ்.எம்.எஸ்., இ மெய்ல் வசதிகளும் இதில் உள்ளன.
அமேஸ்ஃபிட் பேஸ் ஸ்போர்ட் 1.23 இன்ச் எ.சி.டி. டிஸ்பிளேயுடன், 2.5டி கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளது.
அமேஸ்ஃபிட் கோர் பிட்னஸ் பேண்டில் ஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார், ஸ்லீப் ட்ரேக்கர், ஆக்டிவிட்டி மற்றும் ஸ்போர்ட்ஸ் ட்ரேக்கர் உள்ளிட்ட வசதிகள் உள்ளது. 50 மீட்டர் ஆழம் வரை வாட்டர் ரெசிஸ்ட் வசதி, 12 நாட்கள் பேட்டரி லைஃப் உள்ளிட்ட சிறப்பம்சங்களும் இதில் உள்ளன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
A Misanthrope Teaches a Class for Demi-Humans To Stream Soon on Crunchyroll