இந்தியாவில் ரூ.9,999கக்கு வெளியாகும் இந்த இயர்பாட்ஸ், பிரத்தியேக சார்ஜிங் கேசுடன் வெளியாகிறது.
ஸ்கல்கேண்டி தயாரிப்புகள் தங்களது நிறங்களுக்காக மிகவும் பிரபலமானவை.
அமெரிக்காவில் கடந்த 2003 ஆம் ஆண்டு அறிமுகமான ஸ்கல்கேண்டி(Skullcandy) ஆடியோ நிறுவனம் தற்போது தனது புதிய தயாரிப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்கல்கேண்டி நிறுவனத்தின் பிரத்யேக ஸ்டைல் மற்றும் நிறங்களுக்காக அதன் தயாரிப்புகள் உலகம் முழுவதும் பிரபலமானவை. 'தி புஷ்' என பெயரிடப்பட்டுள்ள இந்த வயர்லெஸ் இயர்போன்ஸ் தனக்கென பிரத்யேக சார்ஜிங் கேசுடன் ரூ.9,999க்கு இந்தியாவில் வெளியாகிறது.
மேலும் இந்தத் தயாரிப்புகள் இன்று முதல் ஆன்லைன் தளங்கள் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் விற்பனை செய்யப்படுகறிது. ஸ்கல்கேண்டி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான 'தி புஷ்', இந்த நிறுவனத்தின் முதல் வயர்லெஸ் இயர்போன்களாகும்.
ஆப்பிள் ஏர்பாட்ஸைத் தொடர்ந்து பல முன்னணி நிறுவனங்கள் இதுபோன்ற வயர்லெஸ் இயர்போன்ஸ் மற்றும் ஹெட்போன்களை தயாரித்து வரும் நிலையில் ஸ்கல்கேண்டி வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இந்த தயாரிப்பின் விலையை மிகவும் சரியாக நிர்ணயத்து விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. மேலும் இந்த இயர்பட்ஸ்களைப் பொறுத்தவரை, நீர் புக வழியில்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது.
ப்ளூடுத் வெர்ஷன் 4.2 கொண்ட இந்த இயர்பாட்கள் 12 மணி நேரம் வரை இயங்கும் என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இயர்பாட்கள் உங்களது காதுகளில் மிகவும் கச்சிதமாக பொருந்த ஸ்கல்கேண்டி நிறுவனம் தயாரிப்பில் ஒரு ஜெல் வழங்கபட்டுள்ளது. ஸ்கல்கேண்டி நிறுவனத்தின் தயாரிப்பில் இதற்கு முன்னர் ரிஃப் வயர்லெஸ் ஹெட்போன்கள் ரூ.5,999க்கு இந்தியாவில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
WhatsApp Username Feature Said to Roll Out in 2026, Business Accounts Could Also Get Access
Samsung Galaxy S26 Ultra Camera, Charging Specifications Leaked Alongside Exynos 2600 Details