Samsung Galaxy Watch 7 ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 உடன் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Photo Credit: Samsung
Samsung Galaxy Watch 7 சிப்செட், ஹெல்த் டிராக்கிங் மெட்ரிக்ஸ் மற்றும் விலை விவரம் குறித்த தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. Samsung Galaxy Watch 7 ஸ்மார்ட்வாட்ச் கேலக்ஸி அன்பேக் நிகழ்வில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது , இது ஜூலை 10 ஆம் தேதி நடைபெறும் என்று இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அறிமுக விழாவுக்கு முன்னதாக அமேசான் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி வாட்ச் 7 பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது. ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவுக்கு போட்டியாக சாம்சங் புதிய கேலக்ஸி வாட்ச் அல்ட்ராவையும் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Samsung அன்பேக் நிகழ்ச்சியில் சாம்சங் கேலக்ஸி Z போல்டு 6, கேலக்ஸி Z ப்ளிப் 6, கேலக்ஸி வாட்ச் 7, கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா, கேலக்ஸி பட்ஸ் 3, கேலக்ஸி பட்ஸ் 3 ப்ரோ, கேலக்ஸி ரிங் உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
Samsung Galaxy Watch 7 3nm சிப்செட் மூலம் இயக்கப்படலாம் என்று தெரிகிறது. இது ஸ்மார்ட்வாட்ச்சின் செயல்திறனை அதிகரிக்கும்.அதே வேளையில் சீரான செயல்பாட்டை உறுதி செய்கிறது. சாம்சங்கின் அடுத்த தலைமுறை பயோஆக்டிவ் சென்சார் 2 Samsung Galaxy Watch 7ல் பொருத்தப்பட்டுள்ளது. இது தூக்கம் மற்றும் உடற்பயிற்சியின் போது மிகவும் துல்லியமான இதய துடிப்பு அளவீடுகளை வழங்கும். மேலும் AI பவர்டு ஸ்லீப், AI பவர்டு எக்சர்சைஸ் மற்றும் AI பவர்டு கம்யூனிகேஷன் உள்ளிட்ட AI உடல்நல கண்காணிப்பு அம்சங்களையும் இந்த வாட்ச் பெற்றுள்ளது.
128 ஜிபி சேமிப்பு மற்றும் 40 மிமீ புளூடூத் வசதி உள்ளது. விலை தோராயமாக ரூ. 21,800 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ஸ், IP68 ரேட்டிங் மற்றும் MIL-STD-810H சான்றளிக்கப்பட்ட உறுதிதரத்தை கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung's Privacy Screen Feature to Curb Shoulder Surfing Unveiled After Multiple Leaks; Expected to Debut With Galaxy S26 Series