Reliance Jio நிறுவனம் Happy New Year 2026-ஐ முன்னிட்டு, மூன்று புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது
Photo Credit: jio
Jio New Year 2026 திட்டங்கள்: Gemini Pro, 5G, OTT சலுகைகள்
புது வருஷம் பிறக்கப்போகுதுன்னா, டெலிகாம் கம்பெனிகள்ல இருந்து ஏதாவது ஒரு மாஸ் ஆஃபர் வந்துகிட்டே இருக்கும்! அந்த வரிசையில், நம்ம Reliance Jio நிறுவனம், 'Happy New Year 2026'-ஐ முன்னிட்டு, தன்னோட ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு 3 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்காங்க! இந்த பிளான்கள்ல டேட்டா, காலிங் மட்டும் இல்லாம, AI மற்றும் OTT சலுகைகள் எல்லாம் இருக்கு. ஜியோ அறிமுகப்படுத்தியிருக்கிற 3 திட்டங்களைப் பற்றி detal-ஆ பார்ப்போம்.
நீண்ட கால வேலிடிட்டியை விரும்புறவங்களுக்கு இந்த பிளான் தான் பெஸ்ட்!
.
● வேலிடிட்டி: 365 நாட்கள் (ஒரு வருடம்).
● டேட்டா: தினமும் 2.5 GB ஹை-ஸ்பீடு டேட்டா. (தினசரி டேட்டா தீர்ந்த பிறகு வேகம் 64 Kbps ஆக குறையும்).
● அன்லிமிடெட் 5G: தகுதியுள்ள பயனர்களுக்கு அன்லிமிடெட் 5G டேட்டா அணுகல் உண்டு.
● காலிங் & SMS: அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 SMS.
● மாஸ் சலுகை: இந்த திட்டத்தில் 18 மாதங்களுக்கான Google Gemini Pro AI சந்தா இலவசமாகக் கிடைக்கும்! (இதன் மதிப்பு சுமார் ₹35,100!)
கம்மி வேலிடிட்டி, ஆனா அதிக என்டர்டெயின்மென்ட் விரும்புறவங்களுக்கு இந்த மாதாந்திரத் திட்டம் ஒரு ட்ரீட்!
● வேலிடிட்டி: 28 நாட்கள்.
● டேட்டா: தினமும் 2 GB ஹை-ஸ்பீடு டேட்டா.
● அன்லிமிடெட் 5G: தகுதியுள்ள பயனர்களுக்கு அன்லிமிடெட் 5G டேட்டா அணுகல்.
● காலிங் & SMS: அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 SMS.
● OTT சலுகைகள்: இந்தத் திட்டத்தில் 13-க்கும் மேற்பட்ட OTT தளங்களின் அணுகல் கிடைக்கிறது! (YouTube Premium, JioHotstar, Amazon Prime Video Mobile Edition, Sony LIV, ZEE5, Sun NXT மற்றும் பல தளங்கள்!)
● AI சலுகை: இந்த திட்டத்திலும் 18 மாதங்களுக்கான Google Gemini Pro AI சந்தா இலவசமாகக் கிடைக்கும்!
இது கம்மி டேட்டா மற்றும் குறிப்பிட்ட OTT சலுகையை மட்டும் விரும்புறவங்களுக்கு ஏற்றது.
● வேலிடிட்டி: 28 நாட்கள்.
● டேட்டா: மொத்தமா 5 GB டேட்டா.
● OTT சலுகை: பயனர்கள் தங்களுக்குப் பிடித்தமான ஒரு என்டர்டெயின்மென்ட் பேக்கை (Hindi, International, அல்லது Regional Pack - இதில் Sun NXT, JioHotstar போன்ற தளங்கள் இருக்கும்) தேர்வு செய்து கொள்ளலாம்.
ஜியோவின் இந்த புதிய திட்டங்கள், வெறும் டேட்டா காலிங்-ஐ தாண்டி, AI (Google Gemini Pro) மற்றும் OTT சேவைகளையும் ஒருங்கே வழங்குவதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய மதிப்பைக் கொடுக்கிறது! குறிப்பாக, 18 மாதங்களுக்கான Gemini Pro சந்தா, இந்த பிளான்களை ரொம்பவே ஸ்பெஷலா மாத்துது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Microsoft CEO Satya Nadella Says AI Must Evolve From Models to Systems for Real-World Impact
Samsung Unveils AI-Powered Home Ecosystem With Bespoke Home Appliances at CES 2026