Photo Credit: Gadgets 360
OnePlus Summer Launch Event விழாவில் கூகுளின் WearOS 4, டூயல் ஃபிரிகொன்சி GPS, 12 நாட்கள் பேட்டரி பேக்கப், ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற வசதிகள் மட்டுமல்லாமல் பிரீமியம் கிளாசிக் டிசைனில் OnePlus Watch 2R மாடலானது களமிறங்கி இருக்கிறது. இந்த OnePlus Watch 2R மாடலின் இந்திய மார்கெட் விலை, முழு அம்சங்கள் மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
OnePlus Watch 2R மாடலானது வின்டேஜ் டிசைனில் புதிய வசதிகளை கொண்டிருக்கிறது. அலுமினியம் கேஸ் மற்றும் ரவுண்ட் டயல் டிசைனில் வருகிறது. 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ட் திறன் கொண்டது. தண்ணீரில் 50 மீட்டர்கள் ஆழம் வரையில் தாக்குபிடிக்குமாம். கூகுளின் Wear OS வசதியுடன் வருகிறது.
கூகுள் பிளே ஸ்டோர், கூகுள் மேப்ஸ், கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட், கூகுள் பைல்ஸ் போன்ற ஆப்களை இதில் பயன்படுத்தலாம். 100 மணி நேர பேட்டரி பேக்கப் தரக்கூடியது. தொடர்ந்து 12 நாட்கள் வரை சார்ஜ் போடாமல் பயன்படுத்த முடியும். பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் ஒரு நாள் முழுவதும் பயன்படுத்தலாம். Snapdragon W5 மற்றும் BES 2700 ஆகிய டூயல் சிப்செட் இருக்கிறது. தகராறு செய்யாமல் வேலை செய்யும். 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரி சப்போர்ட் கொண்டிருக்கிறது.
இதனுடன் Dual-frequency GPS, ப்ளூடூத் VO2 Max டிராக்கர், ஹார்ட் ரேட் டிராக்கர், பிளட் ஆக்ஸிஜன் லெவர் டிராக்கர் சப்போர்ட் வருகிறது. மேலும் வாக்கிங், ஜாக்கிங், சைக்கிளிங் போன்ற ஆக்டிவிட்டிகளை இதில் கண்காணிக்கலாம். Google Health சப்போர்ட் வசதி உள்ளது. 1.4 இன்ச் டிஸ்பிளே தெளிவாக இருக்கிறது. Spotify கனெக்டிவிட்டி உள்ளது. IP68 டஸ்ட் ரெசிஸ்டன்ட் உள்ளது. OnePlus Watch 2R மாடலானது ரூ.17,999 என்ற விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. Forest Green மற்றும் Gunmental Grey ஆகிய கலர்களில் கிடைக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்